இந்தியாவின் மிகப்பெரிய அணை "பக்ரானங்கல்" இது ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் முன்னணியில் உள்ளது. இது தவிர இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான அணைகள், — இவைகள் அனைத்திலும் இருக்கும் நீரை ஒரே அணையில் சேமிக்க முடியுமா?? .. இவ்வளவு பெரிய அணை கட்ட ஒரு அடி நிலம்கூட கையகப்படுத்தக்கூடாது. — நிச்சயம் முடியும் ""கனவில்"" என்பீர்கள். —
மோடிஜி கனவு கண்டுவிட்டார்.
இதுபோல் யோசிக்கக்கூட முடியுமா, கடலுக்கு அடியில் ரயில் போட்டோம், மேலே பாலம் கட்டினோம், இப்படியுமா என்று வியந்தனர். விவரம் பார்க்கலாமா??
குஜராத் மாநிலத்தில் ஸௌராஷ்ட்ரா பகுதிகளில் இருந்து நர்மதா, தாதர், மாஹி, சபர்மதி, மற்றும் ஏராளமான சிறிய ஆறுகளில் இருந்து ஆண்டுக்கு 1700 கியுபிக் மீட்டர் நீர் அரபிக்கடலில் "காம்பே" வளைகுடா எனப்படும் இந்த குறுகலான நீர் சந்தியில் வீணாக கடலில் கலந்து கொண்டு இருக்கின்றது.இதனை தடுத்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் பயன் படுத்தும் விதமாக கடலுக்குள் 35 கி.மீ. நீள பிரம்மாண்டமான உலகிலேயே மிகப் பெரிய அணையை 50 ஆயிரம் கோடி செலவில் அமைக்க குஜராத் அரசு திட்டம் வகுத்துள்ளது.
கடல் நீர் உள்ளே வராமல் நல்ல தண்ணீர் இதில் சேமிக்கப்படுவதால் ஒரு சில வருடங்களில் இந்த அணை முழுவதுமே நல்ல தண்ணீராக மாறிவிடும். இந்த அணை கட்டி முடிக்கப் பட்டால் இதில் 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் நீரை சேமிக்கலாம். அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளிலும் உள்ள மொத்த நீரின் அளவைக் காட்டிலும் இதன் நீரின் இருப்பு அதிகமாக இருக்கும். அந்த பகுதியில், கடல் நீர் சிறிது சிறிதாக அதன் தன்மை மாறி நதிகளில் இருந்து பெறப்பட்ட நீர் மூலம், "உப்பு" நீங்கி நல்ல நீர் தேக்கப்படுவதால், அந்த பகுதி முழுதும் அருகில் உள்ள நிலங்களிலும், நிலத்தடி நீர் தன்மை மாறி நல்ல தூய்மையான நீர் கிடைக்கும். சுமார் ஒரு லட்சம் பேர் வரை மீன் பிடி தொழிலை மேற்கொள்ள எளிதான வழி கிடைக்கும்..
கல்பசார்' என்ற பெயரில் கட்டப் பட இருக்கும் பல்நோக்கு திட்டம் கொண்ட பிரமாண்ட அணையின் நீளம் 35 கி.மீ. ஆகும். “”பவநகரையும்”” — “”சூரத்”” நகரையும் இணைக்கும் வகையில் அணையை ஒட்டி 10 வழிச்சாலையும் சாலை நெடுகிலும் காற்றாலை மற்றும் சூரிய மின்சார பேனல்களும் ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன. இந்த இரு நகரங்களுக்கு இடையே சாலை மற்றும் ரயில் வழியாக தற்போதுள்ள தூரம் 350 கி.மீ. ஆகும். இந்த அணை அமைக்கப்பட்டால் “”பவநகர்”” – “”சூரத் இடையே உள்ள தூரம் 150 கி.மீ.,யாக அமையும். 200 கி.மீ. தூரம் குறைகிறது. ஆண்டுக்கு எரிபொருள் வாகன தேய்மானம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இதனால் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள பவநகரில் இருந்து தெற்கு குஜராத்தில் உள்ள சூரத் நகரத்திற்கு ஆமதாபாத் வழியாக சுற்றிச் செல்வது தவிர்க்கப்படும். அணை கட்டுவதற்காக பெரிய அளவு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்த திட்டத்தினால் குஜராத் மட்டுமல்லாமல் மஹாராஷ்ட்ரா மாநிலமும் பயன்பெறும்.
இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 6.5 சதம் கொண்டது குஜராத். ஜனத்தொகையில் சுமார் 5 சதம் கொண்டது — ஆனால் 2 சதம்தான் அங்கே நீர் ஆதாரம் இருக்கிறது. தற்போது குஜராத்தில் 19 சதவிகித நிலப்பரப்பு நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளது. அது 49 சதவிகிதம் என்ற நிலைக்கு வரும்.
நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு இப்போது இந்த திட்டம் துவக்கப்பட இருக்கின்றது. இன்னும் சுமார் 7 ஆண்டுகளுக்குள் நிறைவு பெரும்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.