இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற சுற்றுலாத்துறை பெரிய பங்களிப்பை வழங்கும்

இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ (ஐஹெச்இ 2024) எனப்படும் இந்திய சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியின் 7-வது பதிப்பை இன்று (03-08-2024) தில்லியில் மத்திய சுற்றுலாகலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விருந்தோம்பல் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஐஹெச்இ கொண்டிருந்ததாக கூறினார். இது இந்திய விருந்தோம்பல் துறையை வளர்ப்பது மட்டுமல்லாமல்உலக அரங்கில் அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல எனவும் இது விருந்தோம்பல் துறையின் மையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனைக்கு சுற்றுலாத் துறை பெரிய அளவில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மேலும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவிடல் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் பன்முகத்தன்மைபுதிய வணிக வாய்ப்புகள் உள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.

ஐஹெச்இ 2024 இந்தியாவின் முதன்மையான விருந்தோம்பல் கண்காட்சியாக உள்ளது.  இந்த ஆண்டு இது 2024 ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. ஆடம்பர ஹோட்டல்கள்ரிசார்ட்டுகள்ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்கள்உணவகங்கள்கிளவுட் சமையலறைகள்  உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 20,000-க்கும் மேற்பட்ட இந்த தொழில்துறை சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...