காஸ் மானியம் தொடங்கி, அரசின் அனைத்து நலத் திட்ட பண பலன்கள் அனைத்தும் நேரடி மானியமாக வங்கிக் கணக்கில் வழங்கப்ட்டு வருகின்றன. பலன் உரியவர்களுக்கு நேரடியாக சென்றுசேரவும், மோசடிகளை தவிர்த்து நடைமுறைகளை விரைவாக்கவும் இது உதவுகிறது.
அனைத்து திட்டங்களுக்கும் நேரடிமானியம் மூலம் பலன்கள் வழங்க பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் வலியுறுத்தி யிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் , பீகார், உத்தரபிரதேசம் உட்பட பலமாநிலங்களில் நேரடிமானிய திட்டபிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு யூனியன் பிரதேசங்கள், 70 மத்திய அரசு துறைகளிலும் இந்தபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம், சமையல் காஸ், மண்ணெண்ணெய், உணவுதானிய மானியங்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது. நலத்திட்டம், முதியோர் பென்ஷன், கல்வி உதவித் தொகைகள் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் மத்திய அரசின் கனவுதிட்டங்களில் ஒன்றாக நேரடி மானிய திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பலன்பெறுபவர் தனது ரேஷன் கார்டு, மண்ணெண்ணெய் அல்லது காஸ்மானியம், நலத்திட்டமானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து அறிந்து கொள்ள முடியும். இவை அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளம் ஆகஸ்ட் 1ம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறைகள் உட்பட பலவற்றையும் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் இந்தஇணையதளம் உதவும்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.