திருநங்கைகள் நலன்

திருநங்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனைப் பாதுகாக்க ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019’ மற்றும் அதன் விதிகளை அரசு இயற்றியது. திருநங்கைகள் நலன் சார்ந்த மற்றும் களங்கம் கற்பிக்காத நலத்திட்டங்களை உருவாக்குதல், சமூகத்தில் அவர்களின் கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய இடத்தை உறுதி செய்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டாமை, சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பல நலத்திட்டங்களை வழங்குதல் ஆகியவற்றை இச்சட்டம் மற்றும் விதிகள் கட்டாயமாக்குகின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ‘பிறர்’ என்ற பிரிவில் ‘திருநங்கைகள்’, மொத்த மக்கள் தொகை 4,87,803 ஆகும். ‘பிறர்’ என்ற வகையின் கீழ் பாலினத்தைப் பதிவு செய்ய விரும்பும் எந்தவொரு நபரும் அடங்குவர்.

திருநங்கைகளை சமுதாயத்தில் இணைத்துக் கொள்வதற்காக அவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பின்வருமாறு:

திருநங்கைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவது குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவும், சமத்துவம் மற்றும் முழு பங்கேற்பை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்யவும், அரசின் அனைத்து துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், ஒருங்கிணைக்கவும், திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டது. இக்குழு 16.11.2023 நாளிட்ட அறிவிக்கையின் மூலம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நலனுக்கான விரிவான மறுவாழ்வுக்கான மத்திய அரசின் திட்டம் என்ற துணைக்கூறுடன், வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான விளிம்புநிலை தனிநபருக்கான ஆதரவு  என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருநங்கைகளின் நலனுக்காக திறன் மேம்பாடு, கூட்டு மருத்துவ ஆரோக்கியம், கண்ணியமான இல்லம் என்ற பெயரில் பாதுகாப்பான தங்குமிடங்கள், திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் மூலம் திருநங்கைகளுக்கான சான்றிதழ்கள் வழங்குதல், திருநங்கைகள் பாதுகாப்பு மையங்கள் அமைத்தல் மற்றும் இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக தேசிய சுகாதார ஆணையத்தின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தில்லி, ஒடிசா, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் (2) மற்றும் மகாராஷ்டிரா (3) ஆகிய 9 மாநிலங்களில் ஆதரவற்ற திருநங்கைகளுக்காக, 12 கண்ணியமான இல்லங்கள் (கரிமா கிரேஹ்கள்) மற்றும் தங்குமிடங்களை இத்துறை அமைத்துள்ளது.

தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு, திருநங்கைகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதற்காக, திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். இதில் விண்ணப்பதாரர், திருநங்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். சான்றிதழை வழங்கப்பட்ட பிறகு எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியமின்றி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இந்த இணையதளத்திற்கு 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதுவரை 21330 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகர், அந்தமான் & நிக்கோபார், சிக்கிம், பஞ்சாப், மிசோரம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் 11 திருநங்கைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான், மிசோரம், சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில், 19 திருநங்கைகள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறை தீர்க்கும் அதிகாரியை நியமிப்பதற்கும், திருநங்கைகளுக்கு பாகுபாடு காட்டாததற்கும், பாலினம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும் இடங்களில், திருநங்கைகளிடம் பாகுபாடு காட்டாமல் ஆண் மற்றும் பெண் விருப்பங்களுடன் திருநங்கை என்ற விருப்பத்தை வழங்குவதற்கும். அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு சம வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திருநங்கைகளுக்கான சம வாய்ப்புகள் கொள்கையை இத்துறை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...