இந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சிக்கு வித்திடும் மோடி-

இந்தியாவில் 1990ல் இருந்து 2010 வரை சுமார் பத்து யூரி யா உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டது. அவற்றி ல் ஒடிசாவில் தால்சேர், தெலுங்கானாவில் ராம குண்ட ம்உத்தர பிரதேசத்தில் கோரக்பூர்; ஜார்க்­கண்டில், சிந்­திரி; பீஹாரில், பாரா­யுனி ஆகிய இடங்­களில், மூடப்பட்ட யூரி யா உரம் தயா­ரிக்கும் தொழிற்­சா­லைகளில் இயற்கை எரி
வாயுவை மூலப்பொருளாக பயன்படுத்தி யூரியா தயாரி க்க முடிவு செய்தது மத்திய அரசு.

இதற்காக இந்தியன்ஆயில்கார்ப்பரேஷன், கோல் இந்தி யா, நேஷன ல் தெர்மல்பவர் கார்ப்பரேஷன், ஆகிய மூன் று பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து பெர்டி லை சர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தின் து ணையுடன்60.000கோடி முதலீட்டில் ஹிந்து ஸ்தான் உர்வாரக் &ரசா யன் லிமிடெட் என்கிறபுதிய நிறுவனத் தை உருவாக்கி இந்தியாவில்உர உற்பத்தியை அதிகரி க்கும் வகையில் மூடப்பட்ட உர ஆலைகளை நவீனப் படுத்தி திறக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்தது.

இதன் படி உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் 26 ஆண்டுகளாகமூடிக்கிடந்த கோரக்பூர் யூரியா உற்பத்தி ஆலையை நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி
செயல் பட வைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இந்தியா வில் இரண்டாவது பசுமை புரட்சிக்குமோடி அடி கோலியு ள்ளார்.இந்தியாவில் இரண்டாம் பசுமை புரட்சி
என்பது வாய் வார்த்தை அல்ல.எப்பொழுது மத்திய அரசு
உரத்தொழிற்சாலைகளில் வேம்பு கலந்த யூரியாவை
உற்பத்தி செய்ய உத்தரவிட்டதோ அப்பொழுதே இரண் டா ம் பசுமை புரட்சி தொடங்கி விட்டது என்றே சொல் லலாம்.

ஏனென்றால் இந்த வேம்பு கலந்த யூரியாவினால் விளை நிலங்களில் நைட்ரஜனின் அளவு அதிகரிக்கப்படுவதால்
விளைநிலங்களின் உற்பத்தி திறன் அதிகரிப்பதோடு நீண்ட நாட்களுக்கு மண்ணின் வளம் பாதுகாக்கப்படு கி றது.அதோடு வேம்பு யூரியா பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிக ளை கொல்லும் பூச்சிக்கொல்லியாகவும், மண் ணிலுள்ள கரையான், நூல்புழுக்களையும் கட்டுப்படுத்து கிறது.

வேம்பு யூரியா என்கிற ஒரே உரத்தில் மண்ணுக்கு பாது காப்பும் பயிர்க்கு பாதுகாப்பும் கிடைப்பதால் விளை நில ங் களில் தேவையற்ற இரசாயன மருந்துகளுக்கு வே லைஇல்லாமல் போய்விட்டது,இதனால் மண்ணுக்கு மட்டு மல்ல இந்த மண்ணில் உள்ள நமக்கும் பாதுகாப்பு தான்.இதனால் தான் மோடி இந்தியாவை இரண்டாவது பசுமைபுரட்சியை நோக்கி அழைத்து செல்கிறார் என்று பெருமை யுடன் சொல்கிறேன்.

இன்றைக்கும் நம்மிடையே விவாதத்தில் ஓடிக்கொண்டி ருக்க்கும் ஒரு விஷயம் பசுமை புரட்சிதான்.பசுமை புரட்சி யினால் இயற்கை விவசாயம் அழிந்து பன்னாட்டு உரக்கம்பனிகள் கொழுத்துபோகவே பசுமை புரட்சி இந் தியா வில் தோன்றியது என்று சொல்லிக்கொண்டு இரு க்கிறோ ம்.ஆனால் நமக்கு பஞ்சம் என்றால் என்னவெ ன்று தெரி யுமா? தெரியாது..ஆனால் நம்முடைய அப்பா அம்மா விற்கு தெரிந்திருக்கும்.நமக்கு பஞ்சம் என்றால் என்ன என் றே தெரியாமல் வளர்த்தது இந்தியாவில் 1966ல்தோன்றிய பசுமை புரட்சி தான்.

பசுமை புரட்சி தோன்றுவதற்கு முன் இந்தியாவில் ஆண் டுஒன்றுக்கு உற்பத்தியான அரிசி 30 மில்லியன் டன்னுக் குள்தான் இருந்தது.உதாரணமாக 1966-67 ம் நாட்டில் இந்தியாவில் உற்பத்தியான அரிசி 30.44 மில்லியன் டன்
அரிசிதான்.ஆனால் பசுமை புரட்சி உண்டான பிறகு 1970 ம்ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியான அரிசியின் அள வு42.22 மில்லியன் டன்னாகும்.பசுமை புரட்சிக்கு முன் விளைநிலங்களில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் 863 கிலோ நெல்தான் கிடைத்தது. பசுமை புரட்சிக்கு பிறகு 1970 ம்ஆண்டில்ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் கிடைக் கும் நெல் 1123 கிலோவாக உயர்ந்தது.

அன்றிலிருந்து இன்று வரைவருடத்துக்கு ஒரு மில்லிய ன் டன்னுக்கு மேல் இந்தியா வில் அரிசி உற்பத்தி அதிக ரித்து வந்து கொண்டே இருந்தது.இன்று ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில்2400 கிலோவாக நெல் விளைந்துக் கொண் டிருக்கி றது.இப்பொழுது நாம் சராசரியாக ஒரு வருசத்து க்கு 100 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்து கொ ண் டிருக்கி றோம்.விஞ்ஞானத்தின் பலனால் உண்டான இரசாயண உரங்கள் விவசாயத்தில் சில தீமைகள் செய் தா லும் அதிக ரித்து வரும் இந்திய மக்கள் தொகைக்கு உரமூட்டியது என்பது மட்டும் உண்மை.

இந்த பசுமை புரட்சிக்கு வித்திட்ட உரங்களுக்குமானியம் வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஆண்டுஒன்று
க்கு ஒரு லட்சம் கோடியை உரக் கம்பெனிக ளுக்கு அளி த்து வருகிறது. நம்நாட்டின் ஆண்டு யூரியா பயன் பாடு சுமார் 320 லட்சம் மெட்ரிக் டன். இதில் 245 லட்சம் மெட் ரிக் டன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி போகமீதி இறக்குமதி செய்யப்படுவதால் தரமற்ற உரங்க ளினால்இந்தியாவின் விளைநிலங்கள் உற்பத்தி திற ணை இழந்துவருகின்றது.இதற்கு காரணம் இறக்குமதி யாகும் சீன உரங்கள்.

நம் நாட்டில் மொத்தமுள்ள 32.8 கோடி ஹெக்டேர் நிலப் பரப்பில், தற்பொழுது சுமார்18.கோடி ஹெக்டேர் விளை நிலமாகும். உலகிலேயே இந்தியாதான் அமெரிக்காவு க்கு அடு த்து விளை நிலங்களை கொண்டுள்ளது. ஆனா லும் நம்மைவிட குறைந்த விளைநிலங்களை கொண்ட சீனா உணவுஉற்பத்தியில் நம்மை விடமுந்தி நிற்கிறது.

நம் நாட்டு விளைநிலங்களில் ஒரு ஹெக்டேர் பரப்பில் 2.4 டன் நெல்தான் கிடைக்கிறது.ஆனால் சீனாவில் ஒரு
ஹெக்டேர் பரப்பில் 4.7 டன் நெல் அறுவடை செய்யப் படுகிறது.அதே மாதிரி இந்தியாவில் கோதுமை பயிரி டப் படும் ஒரு ஹெக்டேர் பரப்பில் 3 டன் கோதுமை கிடைக்கி றது,ஆனால் சீனாவில் ஒரு ஹெக்டேர் பரப் பில் 6 டன் கோதுமை கிடைக்கிறது.

இதனால் தான் உலகில் உணவு உற்பத்தியில் இந்தியா இரண்டா வதாகஇருந்தாலும் விளைநிலங்களில் போது
மான விளைச்சல் கிடைக்காமல் நஷ்ட மடைந்துகடன் தொல்லையினால் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதோடு ஒரு வருசத்துக்கு 30,000 ஹெக்டேர் விளைநில ங் கள் வீட்டு நிலங்களாக பட்டா போட்டு விற்கப்பட்டு
வருகின்றது.

இந்தியா வில் விவசாயம் நசிந்து வரும் நிலையில் அதற்கு புத்துயிர்கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை யாகும்.மோடி அரசு விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டி வரு வதைமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பயிர் காப்பீ ட்டுதிட்டமும் இனி வர இருக்கின்ற நேரடி உர மானியத்திட்டமும் விவசாயத்துக்கு நிச்சயம் புத்து யிர் ஊட்டும்.அதற்கு ஏற்றார் போல் மூடிக்கிடந்த உரத் தொழிற்சாலை களுக்கு புத்துயிர் ஊட்டி மீண்டும் அவற் றை திறக்கமத்திய அரசு முடிவு செய்து அதை செயல்ப டுத்தி வருகிறது.

எல்லாவற்றுக்கும் தீர்வுதேடும் நம்முடைய பிரதமர் இத ற்கும் தீர்வு கண்டார்.கத்தார் ஈரான் நாடுகள் நமக்கு கு றை ந்த விலையில் நீண்டஆண்டுகளுக்கு இயற்கை எரி வாயு வினை அளிக்க ஒப்பந்தம் செய்து உள்ளது. ஏற்கன வே மூடப்பட்ட உர உற்பத்தி ஆலைகளில் நாப்தா என்கி ற பெட்ரோலிய பொருளே பயன்படுத்தப்பட்டு வந்தது மோடிஅரசு புதிதாக வடிவமைக்கப்படும் உர உற்பத்தி ஆலைக ளில் இயற்கை எரிவாயுவை மூலப்பொருளாக பயன்படு த்த திட்டமிடப்பட்து.

நம்நாட்டின் ஆண்டு யூரியா பயன்பாடு சுமார் 320 லட்சம் மெட் ரிக் டன். இதில் 245 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட் டிலேயே தயாரிக்கப்படுகிறது. எஞ்சிய தேவைக்கு இறக் குமதி மேற் கொள்ளப்படுகிறது.இந்திய உர உற்பத்தி
வரலாற்றிலேயே ரெக்கார்ட் ப்ரேக் செய்தது மோடி அரசு தான்.கடந்த ஆண்டில் இந்தியாவில் 285 லட்சம் டன் யூரியா உரம் உற்பத்தி செய்யப்பட்டது.இது எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா…

இந்தியா முழுவதும் இப்போதைக்குஇயற்கை விவசா யம் சாத்தியமில்லாத நிலையில்உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க மூடப்பட்ட உரத் தொழிற் சா லைகளை திறந்து இந்தியமண் வளத்தினை மேம்படு த்தும் வேம்பு கலந்தயூரியாவைஉற்பத்திசெய்ய வைத்து இந்தியா வில் இரண்டாவது பசுமை புரட்சியை தொடங் கி வைத்துள்ளார் மோடி.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...