கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் 1645 குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

கோல் இந்தியா லிமிடெட்சமூகத்திற்கு சேவை செய்வதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொவிட் தொற்றுப் பாதிப்புக் காரணமாக பெற்றோரை இழந்து படிப்பைத் தொடர முடியாத 1645 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) முன்முயற்சியான சிஐஎல் ஆஷிஸ் (ஆயுஷ்மான் சிக்ஷா சஹாயதா) என்ற திட்டத்தை கோல் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்களை இழந்த 424 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் நியமனக் கடிதங்களையும் கோல் இந்தியா லிமிடெட் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை துன்பத்தில் உள்ள அந்தக்  குடும்பங்களை ஆதரிக்கும்.

இந்த உதவித் தொகைகளும் பணி நியமனக் கடிதங்கள் இன்று (03-08-2024) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில்வழக்குகளைத் தீர்ப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவமான முயற்சி 2024 ஜூலை 29 முதல் 2024 ஆகஸ்ட் 03 வரை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு லோக் அதாலத் நிறைவு விழாவின் போது கோல் இந்தியாவின் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு நிகழ்ச்சியின்போது 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான மாதிரி காசோலைகளும்கருணை அடிப்படையில் பணி நியமனக் கடிதங்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய் ஒய் சந்திரசூட்மத்திய சட்டம் – நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரால் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள்,  அதிகாரிகள்மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள்,  நிலக்கரி அமைச்சகத்தின் பிரதிநிதிகள்சட்ட அமைச்சகத்தின் பிரதிநிதிகள்கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சிஐஎல் ஆஷிஸ் திட்டத்தின் கீழ்தகுதியான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 45,000/- மதிப்புள்ள உதவித்தொகை நான்கு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கவும்அவர்களின் கனவுகளை அடையவும் முடியும். இக்குழந்தைகள் சரிபார்ப்பு ஆவணங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூகத்திற்கு சேவை செய்வதில் கோல் இந்தியா லிமிடெட்ட நிறுவனத்தின் பங்களிப்பு இந்த நிகழ்வின் போது பெரிதும் பாராட்டப்பட்டது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...