சுதந்திரதினத்தை பாரதவிழாவாக கொண்டாடுவதற்கு மத்தியில் ஆளும் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் சுதந்திரதினம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை பாரதவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதையொட்டி, தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரத விழா, ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கப்படும். ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடையும். இதையொட்டி, இந்தியா கேட் பகுதி விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தில்லி ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் மூலம், நாட்டு மக்களிடையே தேசபக்தி ஊக்குவிக்கப்படும். இதுதவிர, ராஜபாதை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அந்த அரங்குகளில், பல்வேறு மாநிலங்களும் தங்களது சமையல், கைவினை தயாரிப்புப் பொருட்கள் பார்வைக்கு வைக்கவுள்ளன.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இந்தியா கேட் பகுதியில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் போன்ற ஹிந்தி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், பாரதவிழா நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உள்ளுர் கலையுல கத்தினர் பங்கேற்பார்கள். பாதுகாப்புப் படைவீரர்கள் சார்பாகவும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
இந்திய சுதந்திரதினத்தை இதுபோன்ற விழாவாக கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சுற்றுலா அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.