பிரேசில் ஒலிம்பிக்போட்டி 66 வீரர்கள், 53 வீராங்கனைகள் ஆக மொத்தம் 119 இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். 65 பிரிவுகளில் இந்தியா கலந்துகொள்கிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியவீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக மராத்தான் ஓட்டம் டெல்லியில் நடந்தது.‘ரன் பார் ரியோ’ என்றபெயரில் நடத்தப்பட்ட இந்த மராத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து இந்த ஓட்டத்தை தொடங்கிவைத்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம்வெல்ல அவர் வாழ்த்து தெரிவித்தார்.மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-
ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள், வீராங்கனைகள் அதிகமான பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமைசேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தியர்களின் நடத்தையும் சிறப்பாக இருக்கும். 2020 ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் இந்தியா 200-க்கும் அதிகமான வீரர், வீராங் கனைகளை அனுப்பும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவீரர், வீராங்கனைகளை அனுப்ப இப்போதே தயார்படுத்த வேண்டும்.
ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் ஒவ்வொரு வீரர்களின் பின்னால் 125 கோடி இந்தியர்களின் வாழ்த்து இருக்கிறது. நமதுவீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டும் அல்ல, தங்களது நடத்தையாலும் உலக நாடுகளின் இதயங்களை வெல்லுவார்கள். இந்தியா என்றால் என்ன? என்று உலகிற்கு உணர்த்து வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இவ்வாறு மோடி பேசினார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.