கிருஷ்ண ஜென்மாஷ்டமியை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் அவர்கள் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில்:
நாடுமுழுவதும் கிருஷ்ணர் பிறந்ததினமான இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப் படுகின்றது. அனைவருடைய வாழ்விலும் அமைதியும், வளமும்பெருகி, மகிழ்ச்சி பொங்குவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற அறிவுரை, மனிதநேயத்தை பாதுகாக்கும் கொள்கையாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில் நாட்டுமக்கள் வாழ்வில் அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று பொதுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
1oughtn’t