வணக்கம்,தங்கள் ஆட்சியில் குறைபாடுகள் மெல்ல,மெல்ல ஆரம்பித்துவிடுமோ என நினைக்கும் அளவிற்க்கு தங்களது தலைமையிலான அரசு செயல்பட தொடங்கிவிட்டது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார்துறையினை வளர்த்துவிடுவதில் எங்களுக்கு அச்சமில்லை.அரசு
மருத்துவமனைகளின் இன்றைய தரம் என்னவென்று ஆய்வு செய்து பார்த்தீர்களானால் தெரியவரும்.தாங்கள் எதிர்கட்சிதலைவராக இருக்கும்போது அரசு துறையை திமுக அரசு பலவீனமடைய செய்கின்றது என்றும்,அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை விட தனியார் மருத்துவமனை மூலம் சுயலாபம் அடைகிறார்கள் என்றீர்கள்.ஆனால் தற்சமயம் நடக்கப்போவது என்ன?
அரசு மருத்துவர்களின் போராட்டத்தை கையாண்டது போல முழுமையாக அரசு நிர்வாகத்தினை கையாண்டாலே தமிழ் நாடு சுபிட்சம் அடையும்.
ஆரம்ப சுகாதார நிலையம்,வட்டார தலைமை மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் தரம் நிதியினால் மட்டும் உயர்த்தப்படாமல் செயல்பாடுகளின் மூலம் உயர்த்தப்படுமானால் மருத்துகாப்பீடு திட்டம் தேவையற்றதாக மாறிவிடும்.
மக்கள் தங்களிடம் வாய்ப்பைதான் தர முடியும்.பெற்ற வாய்பினை தொலை நோக்கு பார்வையுடன் தேவையறிந்து செயல்படுத்தும் பொறுப்பு தங்களுடையது.
மக்களுக்கு மட்டும் தங்களை செப்பனிடும் பணி தெரிந்திருந்தால் இலவச வேட்டி சேலைக்கும்,இலவச ஆடு,மாடுகளுக்கும்,இலவச அரிசிக்கும் அரசிடம் கையேந்தமாட்டார்கள்.
தனி மனிதனின் பலவீனத்தை குறைக்கும் அளவிற்க்கு ஓர் அரசு செயல்பட வேண்டுமே தவிர பலத்தை குறைக்கும்படி நடக்ககூடாது.
இன்று காவல் நிலையங்களின் செயல்பாடு போற்றும் வகையில் உள்ளது.மிரட்டி கையக்கப்படுத்திய நிலங்கள் இன்று மீண்டும் உரியவர்களுக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.இதுதான் அரசின் சிறப்பு.
சிறப்பான விஷயங்கள் அங்கொன்றும்,இங்கொன்றும் இல்லாமல் பரவாலாக்கப்படவேண்டும்.5 வருட ஆட்சியில் பயனாளிகள் தேவையறிந்து செயல்பட்டால் தமிழ் நாடு ஆரோக்கியம்மடையும்.
மாறாக அனைவருக்கும் இலவசம் என்பத்னை தவிர்த்து தேவைபடுவோருக்கு தேவையானதை தர முயற்சித்தீர்களானால் தங்கள் அரசு மக்கள் அரசாக நிலை பெற முடியும்
தங்களுக்கோ அல்லது தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கோ உடல் நிலை கோளாறு என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கோ [அ] வட்டார தலைமை மருத்துவமனைக்கோ [அ] மருத்துவ கல்லூரி மருத்துவமனைகக்கோ செல்லாமல் உலகத்தரம் வாய்ந்த தனியார் மருத்துமனைக்கு சென்றீர்களானால் சாமன்யர்களும் தனியார் மருத்துவமனைக்கே செல்ல விரும்புவார்கள்..
தனியார் மருத்துமனைகளால்தான் மக்களின் உடல் நிலையை சரி செய்ய முடியும் எனில் அரசு நிர்வாக மருத்துமனைகள் எதற்க்கு?அரசு நிர்வாகத்திற்க்கு துணையாகத்தான் தனியார் மருத்துவ மனைகள் இருக்க முடியுமே ஒழிய எதிர்பதம்மாக இருக்க முடியாது என்பதே திண்ணம்.
தங்களுடைய ஆர்வம்,விருப்பம் புரிகின்றது.ஆர்வம்,விருப்பம் இவைகளுடன் பயணிக்கும் பாதையும் மிகமிக முக்கியம் அல்லவா.பாதையில் பிரச்சனையில் என்றால் நாம் நினைக்கும் இடத்திற்க்கு சென்று சேர கால தாமதம்மாகுமே ஒழிய வேறோன்றும்மில்லை.உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
அறிவியலில் இரண்டு வகை உண்டு.
1.INTROVERT
2.EXTROVERT
இன்றைய தேதி வரை நம் கல்வி நிலையங்கள் இரண்டாம் வகையினையே பின்பற்றுகின்றன.முதல் வகை அறிவியலை நடத்திப்பாருங்கள்.மிகப்பெரிய மாற்றம் தெரியும்.இதைத்தான் மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே மேல் என சொல்லியுள்ளனர்.
மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் நன்கு ஆலோசனை செய்து EXTROVERT SCIENTIST ஐ விட INTROVERT SCIENTIST உடன் கலந்துரையாடினால் தங்களது விருப்பம் நிறைவேறும்.
தமிழகம் முதன்மை மாநிலம்மாக மாறும் ..
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
என்றும் தாயகப்பணியில்
Dr. ந.இளவரசன் B.P.T
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.