உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2017) சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்ததேர்தல்களில் அதிகபட்ச வெற்றியைப்பெற வேண்டும் என்பதில் பாஜக. தீவிரம் காட்டி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கால்ஊன்ற வேண்டும் என்ற பாஜக.வின் நீண்ட நாள் முயற்சிக்கு சமீபத்தில் அசாம்தேர்தலில் வெற்றி கிடைத்தது. அசாமில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த ஆண்டு மணிப்பூரில் நடக்கும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதற்காக மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையில் பா.ஜ.க. உயர் மட்டக்குழு ஒன்றையும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. கடந்த தடவை நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த பாஜக. இந்த தடவை ஆட்சியை கைப்பற்ற புதியவியூகம் வகுத்துள்ளது.
அதன்படி உத்தரகாண்ட் மாநில பாஜக. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய மந்திரிகள் ஜேபிநட்டா மற்றும் தர்மேந்திர பிரதான் இருவரும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.