இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ராணுவ வீரர்கள் தமிழர்களின் நாக்குகளை அறுத்ததாகவும், நிராயுதபாணிகளாக சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதாகவும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது
மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் ‘சேனல் 4’ டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக ‘சேனல் 4’ டெலிவிஷன் அம்பலப்படுத்தி வருகிறது.
இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப்புலிகள் சரண் அடைந்தனர்.
அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கோத்தபய உத்தரவிட்டதும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.
இந்த தகவலை அப்போது அருகில் இருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத்தூதராக பணியாற்றுகிறார்.
போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான பெர்னாண்டோ என்ற ராணுவ வீரர் ‘சேனல் 4’ டெலிவிஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் கல் மனதையும் கரையச் செய்வதாக உள்ளது.
அவர், ”என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக்கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர்.
அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப்புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான்.
பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கற்பழித்தனர். அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.
ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.