விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை மத்திய அரசு நேரடியாகவே கொள்முதல்செய்யும்

விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை மத்திய அரசு நேரடியாகவே கொள்முதல்செய்யும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா கூறியுள்ளார்.


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பருப்பு வகைகளின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.200-க்கு மேல் அதிகரித்தது. இந்நிலையில் பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பருப்பு விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைச்செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை முக்கியமாக பருப்புவகைகளின் விலையை கட்டுப்பாட்டில் வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில், நுகர்வோர் விவகாரம், உணவு, வருவாய், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பி.கே. சின்ஹா கூறியதாவது:


மத்திய அரசு நிறுவனங்களான தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக்கூட்டமைப்பு, இந்திய உணவுக்கழகம், சிறு விவசாயிகள் வேளாண் தொழில் அமைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் விவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை நேரடியாகக் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே இந்த நேரடிக்கொள்முதல் தொடங்கிவிட்டது. இனி தொடர்ந்து பிற மாநிலங்களிலும் கொள்முதல் நடைபெறும்.பண்டிகைக் காலத்தில் நியாயமான விலையில் மக்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...