பாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது

பாஜக  தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக் கோட்டில் வருகிற 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக வருகிற 24-ந்தேதி அவர் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் கோழிக்கோடு வருகிறார். அவருடன் பா,ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு அவரது விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்தில் தரை இறங்குகிறது.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி கோழிக்கோடு விக்ரம் மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார்மூலம் செயற்குழு கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு செல்கிறார். மாலை 5 மணிக்கு செயற்குழுகூட்டத்தில் பிரதமர் பேசுகிறார்.

மறுநாள் 25-ந்தேதியும் பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அன்று காலை பிரதமர் முன்னிலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியாரின் ராமாயண நாட்டியநடனம் இடம்பெறுகிறது. அதைதொடர்ந்து செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் ஜனசங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரை பாரதிய ஜனதாவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தியாகிகளை நரேந்திர மோடி கவுரவிக்கிறார். அவர்களுடன் ஓண விருந்தும் சாப்பிடுகிறார். இந்தசெயற்குழு கூட்டத்தில் பாரதிய ஜனதா முதல்- மந்திரிகள், தேசியதலைவர்கள், கேரள மாநில நிர்வாகிகள் என்று பலர் பங்கேற்கிறார்கள்.

உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப் ஆகிய சட்ட சபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இது பற்றியும் தேசியசெயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும், 25-ந்தேதி இரவு தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டுசெல்கிறார். பிரதமர் கோழிக்கோடு வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...