இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்

ஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான்.

ஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். தமது

சீடர் ஒருவரை அழைத்தார். சகஸ்ரநாம_சுவடியை எடுத்துவரச் சொன்னார். சீடர் எடுத்துவந்த சுவடியைப்பிரத்தார் சங்கரர். அது லலிதா சகஸ்ரநாம சுவடி அல்ல. விஷ்ணு சகஸ்ரநாம சுவடியாக_இருந்தது!

'இந்த சகஸ்ரநாமம் அல்ல; அம்பிகை பற்றிய_சகஸ்ரநாத்தை எடுத்து வா!' என்று  கூறினார் சங்கரர். சீடன் இரண்டாவது முறை எடுத்து வந்த சுவடியும், விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மற்றொரு பிரதியாகவே இருந்தது!

ஆதிசங்கரர், சற்றே கண்மூடித் தியானித்தார். 'சங்கரரே! நீங்கள் எனது சகோதரன் பெருமையைக் கூறும் விஷ்ணு சகஸ்ர நாமத்துக்கே உரை எழுதுங்கள். எனது சகஸ்ரநாமத்துக்கு உரையெழுத, மற்றொருவர் பூமியில் தோன்றப் போகிறார்!' என அம்பிகை அசரீரியாகக் கூறியருளினாள்.

அம்பிகை குறிப்பிட்ட அந்த அருளாளர்தான், மகான் பாஸ்கர ராயர், மராட்டிய மாநிலத்தில் தோன்றி, தமிழ்நாட்டில் குடியேறி, லலிதா சகஸ்ரநாமத்துக்கப் பேருரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வியாச முனிவர் வருணித்த திருவிளையாடல்கள் அனைத்தையும் குருவாயூரப்பன் நிகழ்த்தியதாகக் கூறி, தமது நாராயணீயத்தை இயற்றினார் நாராயண பட்டத்திரி, அதில் ஒரு வரலாறு, எப்படியோ விடுபட்டுப் போனது. ஆம்! பாகவதத்தில் உள்ள மிக முக்கியமான வரலாறுகளில் ஒன்றான ஜடபரதர் சரித்திரம், நாராயணீயத்தில் இடம்பெறவில்லை.

அண்மைக் காலத்தில், நாராயணீயத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி அதனைப் பிரபலமாக்கிய சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள், பட்டத்திரி எழுதாமல் விடுத்த ஜடபரதர் சரித்திரத்தை இயற்றி நாராயணீயத்துடன் இணைத்துள்ளார்கள்! தீட்சிதர் அவர்களின் திருவுருவப் படம் குருவாயூர் திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளது. அதனால் தமிழகம் பெருமை பெற்றது!

இவ்விரு நிகழ்ச்சிகளும், ஞானநூல்கள் கடவுள் திருவருளால் தீர்மானிக்கப்படுபவை என்பதை உணர்த்துகின்றன. அதைப் போலவே மாணிக்கவாசகருடைய வரலாற்றை, 'கடவுள் மாமுனியர்' இயற்றவேண்டுமென்று சிவபெருமான் திருவுள்ளம் கொண்டதால், அது சுந்தரர் மற்றும் சேக்கிழாரின் நூல்களில் இடம் பெறவில்லை போலும்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...