நவராத்திரியின் முதல் மூன்று தினங்களில் மலைமகளான பார்வதியின் அம்சமாகவிளங்கும் துர்கையையும், அடுத்துவரும் மூன்று தினங்களில் அலைமகளான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று தினங்களில் கலைமகளான சரஸ்வதி தேவியையும் வழிபடவேண்டும் என்று பார்த்தோம்.
நவராத்திரியின் முதல் நாளில் துர்கையை சாமுண்டியாகவும், இரண்டாம் நாளில் வராகியாகவும், மூன்றாம்நாளில் இந்திராணியாகவும் எண்ணி வழிபடவேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில் மகா லட்சுமியை வைஷ்ணவி தேவியாகவும், ஐந்தாம் நாளில் மகேஸ்வரி தேவியாகவும், ஆறாம் நாளில் கௌமாரி தேவியாகவும் பாவித்து பூஜிக்க வேண்டும்.
அனைத்து கலைகளையும் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாளன்று சாம்பவியாகவும், எட்டாம் நாளன்று நரசிம்மதாரிணியாகவும், ஒன்பதாம் நாளன்று சரஸ்வதியாகவும் எண்ணி வழிபடுதல்வேண்டும்.
நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்குவயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்துபோல் விளங்கும் ஜவ்வரிசியினால்
மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரியதேவி – இந்திராணி. குமாரியின் பெயர் – கல்யாணி. மந்திரம் ஓம் கல்யாண்யை நம: சுவாசினியின் பெயர் – சந்த்ர காண்டா. மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம:. நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல். வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் – வித்யை, ராஜ்யம், பதவிகள் கிடைக்கும்
இன்று நாம் வழிபடும் அம்பிகையான இந்திராணி கார்மேகம் போன்றவள்; ஒளிவீசும் ரத்தினங்கள் பதித்த கிரீடத்தை தன் தலையில் அணிந்த இவள் அழகியவெள்ளை யானையின் மீது அமர்ந்திருப்பாள்; இனிய மணம் கமழும் மலர்களை தன்தலையில் சூடியிருக்கும் இவள் சப்தகன்னியரில் ஒருவள்ஆவாள்..
அன்னை இந்திராணி தேவிக்கு மாஹேந்திரி, ஐந்திரி தேவி போன்ற திருநாமங்களும் உள்ளன. இவளை வழிபடுவதால் யமபயம் நீங்குகிறது. அதுமட்டுமின்றி தன்னை முழுமனதோடு வணங்கும் பக்தர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையையும் தந்தருள்கிறாள். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இன்று இந்திராணி தேவியை வணங்கினால் பலசிறப்புக் குணங்கள் பெற்றிருக்கும் கணவனைப் பெற்று, இனிமையான இல்லறத்தை மேற்கொள்ளலாம். மேலும் இந்திராணியை வழிபடுவதால் உயர்ந்த பதவிகளையும் அடையலாம்.
நவராத்திரி விரத பூஜை என்பது பெண்களுக்கான பூஜை மட்டுமே அல்ல. ஆண்களும் நவராத்திரி விரதம் இருந்து முறைப்படி அம்பிகையை வழிபட்டால், அனைத்து நலன்களையும் பெறலாம்.
சுரதன் என்ற ஓர் அரசன் விதிப்பயனாக வேற்று தேசத்து மன்னனிடம் தன்ராஜ்யம், சொத்து, சுகம் அனைத்தையும் தோற்றுவிட்டான். இனி நாட்டில் இருந்தால் தனக்கு ஆபத்துதான் என்று நினைத்த மன்னன் காட்டுக்குச் சென்றுவிட்டான். காட்டில் ஒரு ரிஷியை சந்திக்கநேரிட்டது. அவருடைய பெயர் சுரேதஸ். மன்னனின் நிலையைக் கண்டு மனம்இரங்கிய மகரிஷி, ‘மன்னா, நீ கவலைப்பட வேண்டாம். நீ என்னுடைய ஆசிரமத்திலேயே தங்கிக் கொள்ளலாம். நீ இங்கே இருக்கும்வரை உனக்கு ஆபத்து எதுவும் வராது” என்று அடைக்கலம் கொடுத்தார்.
மகரிஷியின் ஆதரவில் மன்னன் காட்டிலேயே இருந்தான். ஆனாலும் எப்போதும் அவனுக்கு தான் இழந்த ராஜ்யத்தின் நினைவாகவே இருந்தது. ஒருநாள் அதேசிந்தனையுடன் அவன் ஒரு மரத்தினடியில் படுத்திருந்தான்.
அப்போது அந்தவழியாக ஒருவன் சோகம் கப்பிய முகத்துடன் வந்துகொண்டிருந்தான்.
மரத்தினடியில் படுத்திருந்த மன்னன், அவனிடம், ‘ஐயா, தாங்கள் யார்? ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’ என்றுகேட்டான். அதற்கு அவன், ‘என் பெயர் சமாதி. எனக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. ஆனால், எனக்கு வயதாகிவிட்ட நிலையில் என்பிள்ளைகள் என்னைப் பார்த்துக்கொள்ளாமல் உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால்தான் நான் அமைதியைத்தேடி காட்டுக்கு வந்துவிட்டேன்” என்றான்.
அவனை அழைத்துக்கொண்டு மன்னன் ஆசிரமத்துக்குத் திரும்பினான். மன்னன் எப்போதும் தான் இழந்த ராஜ்யத்தையே நினைத்துக் கொண்டிருப்பதை அறிந்த மகரிஷி, அவனிடம் நவராத்திரி விரதத்தின்மகிமையைப் பற்றி விளக்கமாக சொல்லி, நவராத்திரிவிரதம் அனுஷ்டிக்கும்படிக் கூறினார். அப்படியே இருவரும் அம்பிகையை பூஜித்தனர். பூஜையின் நிறைவில் அம்பிகை அவர்களுக்கு தரிசனம்கொடுத்து, வேண்டும் வரங்களைக் கேட்கும்படிக் கூறினாள். மன்னன் தான் இழந்த ராஜ்யத்தைத் திரும்ப கேட்டான். அம்பிகையும், ‘கவலைவேண்டாம். உன் பகைவர்கள் உன்னிடமே சரண் அடைவர். நீயும் உன் ராஜ்யத்தைத் திரும்பப்பெற்று சுகமாக வாழ்வாய்’ என்று வரம் தந்தாள். சமாதியோ தனக்கு ஞானம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். அம்பிகை அப்படியே வரம் தந்தாள். மன்னனுக்கு அவன் இழந்தராஜ்யம் திரும்பக் கிடைத்தது. சமாதி விரும்பியபடியே அவனுக்கு ஞானம்கிடைத்தது. இத்தனை மகிமைகள் பொருந்திய நவராத்திரி வைபவத்தை நாமும் கொண்டாடி அம்பிகையின் அருளைப் பெறலாமே.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |