விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதில கொடுக்க காத்திரு்த இந்திய ராணுவம் செப்டம்பர் 28ம் தேதியை தேர்வு செய்து. புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இரவு 12.30 மணிக்கு இந்திய விமானப்படை , ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதலை துவங்கியது. 2 கிலோமீட்டர் மற்றும் 500 மீட்டர் தூரம் உள்ளே சென்ற இந்திய ராணுவம் தொடர்ந்து 4 மணி நேரம் தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து தீவிரவாத முகாம்களை தாக்கினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. 100 க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொத்துக் கொத்தாக கொல்லப் பட்டுள்ளனர்.
கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி இந்திய எல்லைக்குள்வந்து வாலாட்டியது. அதைபார்த்த இந்திய ராணுவம் அவர்களை விரட்டியதுடன் பாகிஸ்தானுக் குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியது.
17 ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.