இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !

இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !
இவங்க கட்சியின் செய்தி தொடர்பாளர் ( குறிப்பு :தென்காசி ) ஒருவர் , பிரதமர் ஏன் உக்ரைன் போய் ஒருவாரம் தங்கி மாணவர்களை அழைத்து வரமுடியாதான்னு கேட்கிறார் ? ஊரே சிரித்தது அவரை பார்த்து !

இவங்க அமைச்சர் ஒருவர் , தமிழ்நாட்டு அரசு மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதுன்னு ஒரு பேட்டி ! – தமிழ்நாடு அரசு விமானபோக்குவரத்து கழகம் என்று இருப்பது நமக்குத்தான் தெரியல போல !
இவங்க இப்படீன்னா , தலைவர் அதற்கும் மேலே ! ஏதோ உக்ரைன் இந்தியாவிற்குள் இருப்பதுபோல , நாம ராணுவத்தை அனுப்பி அழைத்து வந்துரலாம்னு நினைப்பு!

அநேக மாணவர்கள் மருத்துவ படிப்பிற்காக சென்றவர்கள் , இங்கே தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கேட்பதால் தானே ! அங்கே மருத்துவப்படிப்பு செலவு குறைவு ! இவங்க எல்லாரும் நீட்தேர்வு பாஸ் ஆகல , மார்க் குறைவு அதனால அங்க படிக்க போறாங்க !

அதற்கு நீங்க என்ன செய்யணும் , தமிழ்நாடு முழுவதும் அரசு நீட் பயிற்சி மையம் அமைங்க ! TASMAC நடத்த தெரிந்த அரசுக்கு , நாளைய எதிர்கால மருத்துவர்களுக்கு பயிற்சி மையம் நடத்தமுடியாதா?. சரி கொஞ்சம் திமுக தலைவருக்கு , ரஷ்யா பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை ரஷ்யாவிடம் சில மணி நேரங்கள் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இந்தியர்களை வெளியேற்றும் வரை தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கார்கிவ் பகுதியில் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியர்களுக்காக ரஷ்ய ராணுவம் கான்வாய் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் சிக்கி உள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

அதன்படியே ரஷ்ய அதிபர் புடின் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவிசெய்வோம் என்று உறுதி அளித்தார். ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்கமுடியாது. மிஸைல் தாக்குதல் நடக்கலாம். தரைவழியாக மீட்கிறோம் என்று புடின் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்திய மக்கள் பலரை ரஷ்ய ராணுவம் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை மீட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...