மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் புதியநம்பிக்கை உதயமாகியுள்ளது. நம் நாடு மிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் குடிமக்களின் கைகளில் தான் இருக்கிறது.
ஜெயின் சமூகம் உட்பட பல்வேறு சமூகங்களில் பசுபாதுகாப்பு என்னும் முறை கடைபிடிக்கப் படுகிறது. அதை நாம் மேற்கொள்வதில் தவறு எதுவும்இல்லை. ஆனால் பசுபாதுகாப்பில் ஈடுபடும்போது சட்டத்துக்கு உட்பட்டு நாம் செயல்படவேண்டும். ஒரு சிலர் பசு பாதுகாவலர்கள் என்று போலியாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கின்றனர்.
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை பாகிஸ்தானே பின்னிருந்து இயக்குகிறது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அமைதிநிலவுகிறது. ஒருசில இடங்களில் பிரிவினைவாதிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
எல்லையில் ராணுவத்தினரின் துல்லிய தாக்குதலுக்காக அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். ஒருசிறிய கவனக் குறைவு கூட எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும். எல்லை பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். இந்தப் பணியில் மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு உதவவேண்டும்
நம் சமூகத்தில் வேறுபாடுகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் கலாச்சாரமே அதுதான். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நமதுகலாச்சார அடையாளத்தை பேணிக்காப்பது நம் அனைவரது கடமையும் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிறுவப்பட்ட தினம் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 91-வது ஆண்டு விழா இன்று அந்த மைப்பின் தலைமையகமான நாக்பூரில் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் மோகன் பாகவத் பேசியது:
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.