நகர்ப்புற நக்சல்களை அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை மக்கள் கிழித்தெறிய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று, தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, குஜராத்தில் ஏக்தா நகரில் உள்ள இந்தியாவின் மிக உயரமான படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேசிய ஒற்றுமைப் படை பேரணியை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, அவர் கூறியதாவது: நகர்ப்புற நக்சல்கள் சாதியை வைத்து நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கின்றனர். ஒற்றுமையாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்க முடியும் என்று வலியுறுத்துபவர்களை நகர்ப்புற நக்சல்கள் குறிவைக்கின்றனர்.
நகர்ப்புற நக்சல்களை மக்கள் தான் அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை கிழித்தெறிய வேண்டும், என எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்தார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |