இனி தோட்டாக்கள் மட்டுமே பேசும், அதுவும் பாகிஸ்தான் மண்ணிலிருந்தே பேசும்

தான் பதவியேற்ற இரண்டறை வருடத்தில் பாகிஸ்தானுடன் நடப்புக்கரம் நீட்ட முயன்ற போதெல்லாம், நம்பிக்கைத் துரோகத்தை மட்டுமே பரிசாக தந்த பாகிஸ்தானுக்கு, உரி இராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின்  தாக்குதலை மையமாக வைத்து, மொத்தமாக பெரும் பதிலடியை தந்து தேசத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

 

சமிபத்தில் ஜம்மு கஷ்மீரின் உரி இராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 இராணுவ வீரர்களை நாம் இழந்தோம. இதற்கு முன்பு பதன்கோட், மும்பை தாக்குதல், வருடத்துக்கு சிறு,சிறு சிறிய தாக்குதல் என்று 1980 லிருந்து பலநூறு தாக்குதலை நாம் சந்தித்து விட்டோம். இப்படியாக பலாயிரம் பேர்களை நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இழந்து விட்டோம். ஆனால் இவற்றுக்காக இது வரை ஆண்ட அரசுகள் பாகிஸ்தானை பழிவாங்க எண்ணியதில்லை. திருப்பித் தாக்க முனைந்ததும் இல்லை, இதையும் கடந்து செல்வோம் என்று சம்பிரதாய கண்டனங்களை தெரிவித்துவிட்டு காலத்தைத்தான் கடத்தின.

 

 

இந்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி 2014ம ஆண்டு பதவி ஏற்ப்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்க்கு அழைப்பு விடுத்து நேசக்கரம் நீட்டினார். ஆனால் பாகிஸ்தானோ ஒரு சில மாதங்களில் தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி தனது பாசத்தை வெளிப்படுத்தியது. பின்பு நவாஸ் ஷரிப் இல்ல நிகழ்ச்சிக்கு அழைக்கப் படாமேலே பாகிஸ்தான் சென்று பாசக்கனையை ஏவினார். ஆனால் பாகிஸ்தானோ சரியாக 7ம நாள் பதன்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்தி அன்புக்கு கட்டுப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்று தனது மாண்பை மிண்டும் காட்டியது. அன்றே பாகிஸ்தானுக்கு பாடம் கற்ப்பிக்க இந்தியா தயாராகி விட்டது. மிகச் சரியான சமயத்தை எதிர்பார்த்து!!.

 

இந்நிலையில் தான் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த உரி இராணுவ முகாம் மீதான பாக் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலை சரியான சமயமாக இந்தியா பயன்படுத்திக் கொள்ள முற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களில் இருந்து தான் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த முகாம்களை தாக்கி அழிக்க இந்திய ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

‘சர்ஜிகல் ஸ்டிரைக்ஸ்’ என்ற பெயரில் ராணுவத்தின் கமாண்டோ படை பிரிவு  இரவு 12.30 மணிக்கு சுமார் 200 வீரர்களுடன்  8 குழுக்களாக பிரிந்து பாகிஸ்தான் எல்லைக்குள் 2.5 கி.மீ. வரை ஊடுருவி அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.


விமானப்படை, ஹெலிகாப்டர்களும்  உதவி புரிந்தன. பாராசூட்களில் இறங்கியும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இந்த அதிரடி தாக்குதலில் 7 தீவிரவாத முகாம்களை  கூண்டோடு அழித்து. அதில் பதுங்கி இருந்த 50க்கும் அதிகமான தீவிரவாதிகளை கொத்து கொத்தாக கொன்று எந்த உயிர்ச் சேதமும் இன்றி நம் வீரர்கள் நாடு திரும்பினர்.

 

 

இதன் மூலம் 2015 இல் இந்திய ராணுவம் மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதி முகாம்களை  அழித்ததை போன்று  பாகிஸ்தானுக்குள்  தாக்குதலை நடத்த முடியாது என்ற பிம்பம் தகர்க்கப் பட்டுள்ளது.  சர்ஜிகல் ஸ்டிரைக்ஸில் இஸ்ரேல், அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும்  வலிமை பெற்ற நாடாக உருவெடுத்துள்ளது.

 

 

தாக்குதலுக்கு பின்பும் பங்களாதேஷ், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டைய  நாடுகள் இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததும்,  பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்போம் என்ற அமெரிக்காவின் அறிக்கையும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்ப்போம் என்ற ரஷ்யாவின் அறிக்கையும். சீனாவின் நிர்பந்த மௌனமும், இந்தியாவின் ராஜ தந்திரத்துக்கு கிட்டிய மற்றுமொரு வெற்றியாகும்.

 

 

மேலும் இனி பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஏவினாலோ!, அதனால் பெரும் சேதம் உருவானாலோ!!, இந்திய தோட்டாக்கள் மட்டுமே பேசும், அதுவும் பாகிஸ்தான் மண்ணிலிருந்தே பேசும் என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் நாம் இருவரும் வறுமையை வெல்ல போர் புரிவோம், மக்களுக்கு வளமான வாழ்க்கையை தர போர் புரிவோம், அதில் யார் முதலில் வெல்கிறோம் என்பதை பார்ப்போம்  என்கிற பாரத பிரதமர் நரேந்திர மோடியின்  சமீபத்திய அறிக்கைக்கு இன்றும் உயிர் இருக்கிறது. அதை தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய கடமை பாகிஸ்தானிடமே உள்ளது.

 

தமிழ்த் தாமரை வெங்கடேஷ்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...