டெல்லியில், தேசிய பழங்குடியினர் திரு விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் கலாச்சாரம், பாராம் பரியத்தை பாதுகாக்கவும், அதனை வளர்க்கவும் மத்திய அரசு பழங்குடியினர் திருவிழாவை நடத்த முடிவுசெய்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க விழாவில், பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி இவ்விழாவை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை நகர் டெல்லிக்கு வந்திருக்கும் பழங்குடியினரவை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற பண்டிகை காலத்தில் நீங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆற்றியபங்கு பெரிது. பழங்குடியினர் தான் நமது காடுகளை பாதுகாத்துள்ளனர். வனங்களைப் பாதுகாப்பது என்பது பழங்குடியின கலாச்சாரத்தின் ஒருபகுதியாகும்.
தேசிய பழங்குடியினர் திரு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி ஜுவல் ஓரம், மத்திய சுற்றுச் சூழல் இணை மந்திரி அனில் மாதவ் தவே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில்1600 கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.