2017ம் ஆண்டில் வழக்கமானதை விட, ஒரு மாதம் முன்பாக, பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் பொதுபட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் அறிக்கைகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படுவது வழக்கம். ஆனால், தற்போதைய அரசு, ரயில்வேபட்ஜெட் மற்றும் பொதுபட்ஜெட் என இரண்டையும் ஒன்றாக சேர்த்து, ஒரேநாளில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அத்துடன், பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட்தாக்கல் செய்யப்படுவதை விட, பிப்ரவரி முதல்வாரம் அல்லது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பொதுபட்ஜெட் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் நரேந்திரமோடியும் உறுதிப்படுத்தி யுள்ளார். 2017ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முன்கூட்டியே பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.