மத்தியப் பிரதேச தலை நகர் போபாலில் உள்ள மத்திய சிறைச் சாலையில் இருந்து நேற்று முன்தினம் 8 ‘சிமி’ தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். அப்போது சிறை தலைமை காவலரைக் கொடூரமாக கொலைசெய்தனர்.
உடனடியாக களத்தில் இறங்கிய போலீஸார் சிறைச் சாலை அருகே ஒரு கிராமத்துக்குள் பதுங்கி இருந்த 8 தீவிர வாதிகளையும் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் தப்பிச்சென்ற 8 மணி நேரத்துக்குள் அவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து நடவடிக்கை எடுத்ததற்கு பாஜக பாராட்டுதெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறை தலைமை காவலர் ராம்சங்கர் யாதவின் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘நமது வீரர்களின் தியாகங்களை அரசியல்வாதிகள் சிலர் உதாசீனப்படுத்தி விடுகின்றனர். வெறும் வாக்குவங்கி அரசியலுக்காக இந்த விவகாரத்தைப் பெரிதாக்கபார்க்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.