"ரிபப்ளிக்" என்கிற பெயரில் புதிய சேனல் தொடங்குகிறார் அர்னாப் கோஸ்வாமி. "தைனிக் பாஸ்கர்" என்கிற இந்தி நாளிதழின் விழாவில் பங்கேற்று பேசிய அர்னாப் கோஸ்வாமி, அரசியல்வாதிகளை எதிர்க்கும் துனிவை எவ்வாறு வளர்த்திக் கொண்டார் என்பதை விளக்கினார்.
"1996ல் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதி பாசுவை நேர்கானல் செய்தது தொடர்பாக, ஒரு கம்யூனிஸ்டு தொண்டன் என்னை, சி பி எம் கட்சி வாசலில் வைத்து தாக்கத் தொடங்கினார். அவர் என்னை ஒரு சுவரோடு வைத்து அழுத்தி என் கேமராவையும் பிடுங்கினார். திரும்ப திரும்ப என்னை தள்ளி விட்டு என் தலையை சுவரில் மோதினார்.
அதன் பின் நான் அதை விடவில்லை. நான் கம்யூனிஸ்டுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். நான் அவர்களின் கட்சி வாசலிலேயே உண்ணாவிரதம் இருந்தேன். வேறு வழி இல்லாமல் அவர்கள் மன்னிப்பு கோரினார்கள். இது போன்ற சம்பவங்கள் என்னை வலிமை படுத்துகின்றன. "ரிபப்ளிக்: சேனலை தொடங்க அவையே உந்து சக்தியாக இருக்கின்றன.
"நான் மக்களை கைவிட்டு விட மாட்டேன். நான் "டைம்ஸ் நவ்" இல் இருந்து விலகியதை கண்டு ஆனந்தப் பட்டவர்கள் இனி அதற்காக வருத்தப்பட வேண்டும். ரிபப்ளிக் முழு வேகத்தில் வரும்.. மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். "நீ தனி மனிதன், குறைந்த பணமே உன்னிடம் உள்ளது, உன்னால் பெரும் ஊடகங்களோடு போட்டி போட இயலாது" ஆனால் நான் இந்த நாட்டை நம்புகிறேன். அதனால் தான் இந்த சேனலுக்கு "ரிபப்ளிக்" என்று பெயர் வைத்துள்ளேன். இது மக்களுக்கானது. மக்களின் இதயங்களுக்கு நேராக செல்லக் கூடியது. நான் உண்மையானவனாக இருந்தால் நிச்சயம் நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள்".
அருமை அர்னாப் வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறோம். தேச விரோதிகளை நீங்கள் கதற விடுவதை கேட்க ஆவலாக இருக்கிறோம். We miss you so much Arnob !!
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.