ஜல்லிக்கட்டு என்ன என்பதும், அதில் காளைகள் துன்புறுத்தப் படுவதில்லை என்பதும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும். என பாஜக எம்பி இல.கணேசன் பேசினார்.
மாமதுரை மக்கள் பேரவை சார்பில் அவருக்கு தொழில்வர்த்தக சங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநிலச் செயலர் ரா.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எஸ்.சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் வரவேற்றார். இதில் இல.கணேசன் பேசியதாவது:
மத்தியஅரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நியாயமான முறையில் சம்பாதித்தவர்கள் பயப்படத் தேவையில்லை. இந்தவிவகாரத்தில் பலகருத்துகளை பரப்புகின்றனர். இத்திட்டத்தை மக்கள் எதிர்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள்தான் எதிர்த்து குரல் எழுப்புகின்றனர். நேர்மையாக சம்பாதித்த பணத்துக்கு நஷ்டம்வராது. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து பேச பாஜகவுக்கு அருகதை இல்லை என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார். உண்மையில் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்கப் பட்டது காங்கிரஸ் ஆட்சியில். அந்த ஆட்சிக்கு துணைநின்றது திமுக.
ஜல்லிக்கட்டு என்ன என்பதும், அதில் காளைகள் துன்புறுத்தப் படுவதில்லை என்பதும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும். அதனால்தான் காளைகளை காட்சிப் படுத்தப்படும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தர விட்டது. ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்தவழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இறைச்சிக்காக மாட்டை வெட்டுவதற்கு தடை விதிக்க வில்லை. ஆனால், உயிருடன் உள்ள மாட்டுடன் விளையாட மட்டும் தடைவிதிப்பதா? என சுப்பிர மணியன்சுவாமி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்லதீர்ப்பு வரும் என நம்பிக்கையுள்ளது. சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் தான் மத்திய அரசுக்கு வேலைவரும். ஜல்லிக்கட்டு வழக்கில் நல்ல தீர்ப்பு வரட்டும் என மீனாட்சியம்மனை பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.