அடப்பாவிகளா இப்படி மாறிட்டிங்களே!

அதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசிய,  பேச்சு பொதுக் குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக் குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய் விட்டனர்.

 

1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார். அதிமுகவும் இருந்திருக்காது என்று பகீர்தகவலை கொடுத்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சின்னம்மா போட்ட பிச்சைதான் ஜெயலலிதா முதல்வராக இருந்தது. சின்னம்மா நினைத்திருந்தால், ஜெயலலிதாவும் எப்போதோ காணாமல் போய்இருப்பார். என்று பொங்கினார். ஒருநிமிடம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆடிப்போனார்கள்.

 

அதிமுக கொள்கை பரப்பு செயலாளரான பொன்னையன்,  அதற்கு ஒருபடி மேலேசென்று, சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அதிமுக எனும் கட்சிக்கு ஓடாய்உழைத்தது என ஒரேபோடாய் போட்டார்.

 

எம்ஜிஆர் காலகட்டத்தில் அதிமுகவினரால் கொடிக்கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. சின்னம்மா சகோதரர் திவாகரன், அரிவாளுடன் சென்று பலகிராமங்களில் அதிமுக கொடியேற்றினார் என பரபரத்தார்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவை பார்க்க விடாததற்கு ஒரேகாரணம், அம்மாவுக்கு இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பது மட்டுமல்ல, அந்த இன்பெக்ஷ்ன் உங்களுக்கு வந்துவிடும் என்பதால் தான்  இந்த முடிவை எடுக்கப்பட்டதாக பொன்னையன் கூறியது அதிமுக உண்மை தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை தோற்றுவித்ததாம்.

வெறும் தலை யாட்டி பொம்மைகளாகவும், செம்மறியாடுகளாகவும் பலஆண்டுகளாக இருந்து வந்த இந்த கூட்டம், ஜெ., இருக்கும்வரை ஒருவார்த்தைகூட பேச அருகதையற்ற, அடிமைகள், இன்று அவர் இல்லை என்றதும் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுகிறார்கள் என்று பலஉண்மை விசுவாசிகள் முணுமுணுத்தனர்.

பொதுக்குழுவில் அதிமுக தலைவர்கள் பேசியபேச்சை, விலாவரியாக வெளியிட்டுள்ளது பிரபல தமிழ் வாரம் இருமுறை வெளியாகும் இதழ்.

 

இதனிடையே அவரின் மதிப்பு, செல்வாக்கு மற்றும் தகுதி குறித்து விகடன் இதழ் சர்வே ஒன்றை நடத்தி தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...