பொங்கல் விடுமுறை குறித்து பல ஊடகங்கள் உட்பட சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் ,
முதலில் எப்போதும் பொங்கல் நாடு முழுமைக்கான கட்டாய விடுமுறையாக இருந்தது இல்லை .
மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 17 நாட்கள் கட்டாய விடுமுறை .
குடியரசு தினம் , சுதந்திர தினம் ,காந்தி ஜெயந்தி இவைகளை தவிர மீதம் உள்ள 14 நாட்களில் 3 நாட்களை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் வைத்து கொள்ளலாம் ,
இதை state working committee முடிவு செய்யும் .
ஊழியர்களில் administrative மற்றும் operative என்று இரண்டு வகை உண்டு இதில் administrative ஊழியர்களுக்கு சனி ஞாயிறு விடுமுறை .
இந்த ஆண்டு பொங்கல் சனி கிழமை வருவதால் நம் மாநிலத்துக்கு கேட்க வேண்டிய 3 நாளில் பொங்கலை சேர்க்காமல் சிவராத்திரி , விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா இவைகளை நம் state working committee பரிந்துரைத்து உள்ளது .
எனவே அந்த நாளை கட்டாய விடுமுறையாக சேர்க்காமல் restricted holiday ஆகா இரண்டு மாதம் முன்பாகவே அறிவித்து விட்டார்கள் .
ஏற்கனவே கட்டாய விடுமுறையில் இருந்த பொங்கலை திடீர் என்று நீக்கி விட்டது போல ஊடகங்கள் பரபரப்பு காட்டுவது தவறு ,இது தொழிற்சங்கங்களின் தவறு
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.