பொருளாதார வலிமையில் உலகின் மிகப் பெரிய நாடு என்ற பெருமைக்குச் சொந்தமான அமெரிக்கா, கடந்த 94 ஆண்டுகளாக கடன்பத்திர தர மதிப்பீட்டில் ‘ஏஏஏ’ என்ற உயர் அந்தஸ்தை பெற்றிருந்தது. இதனால், அந்நாட்டின் கடன்பத்திரங்களில் எவ்வித அச்சமுமின்றி தைரியமாக முதலீடு செய்யலாம். இதனால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட
பல நாடுகள் அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதை சிறந்த வாய்ப்பாக கருதி வந்துள்ளன.
இந்நிலையில், கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் ஸ்டாண்டர்டு – பூர்ஸ் நிறுவனம், சனிக்கிழமை அன்று, அமெரிக்காவின் கடன்பத்திர மதிப்பீட்டு அந்தஸ்தை ‘ஏஏ+’-ஆக குறைத்துள்ளது.
இதனால், அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிக்கும்.
கடந்த 2010-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் 41,400 கோடி டாலராக இருந்தது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாகும். கடன்பத்திர தர மதிப்பீட்டை குறைத்துள்ளதால், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் அதிகரிக்கும் என ஜே.பி.மார்கன் சேஸ் – கோ தெரிவித்துள்ளது.
ஆக, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்ப்பட்டது . இதன் தாக்கம் நம் நாட்டிலும் எதிரொலித்தது.
Tags;ஆட்டம் காணும், அமெரிக்க பொருளாதாரம் , அமெரிக்காவின், பொருளாதார, அமெரிக்காவின் இந்த, அமெரிக்காவிற்கு, அமெரிக்காவிற்கான
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.