எஸ்.எம்.கிருஷ்ணாவா ? உளறல் கிருஷ்ணாவா?

ராஜ்யசபாவில் கேள்விநேரத்தின்போது ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த திவாரி பேசுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் முகம்மது கலீல் சிஷ்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாடக் கூடிய அளவில் சிறையில் வாடி வருகிறார். அவரை விடுவிப்பது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

உறுப்பினர் குறிப்பிட்ட சிஷ்டி, இந்தியாவி்ன் ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூம் சமீ்பத்தில் தெரிவித்திருந்தார். அது குறித்துத்தான் இன்று உறுப்பினர் திவாரி கேட்டார்.

அதற்குப் பதிலளிக்க எழுந்த கிருஷ்ணா, குறிப்பிட்ட அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அரசுதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட சலனமில்லாமல் பேசினார்.

இதைக் கேட்டதும் உறுப்பினர்கள் பெரும் குழப்பமு்ம், அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால அதைக் கூட கவனிக்காத, சுதாரிக்காத கிருஷ்ணா தொடர்ந்து பேசுகையில், 80 வயதாகி விட்ட சிஷ்டி வீல்சேரில்தான் நடமாடி வருகிறார். அவரை விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதுகுறித்து தூதரக அளவில் பாகிஸ்தானுடன் பேசுவோம் என்று பேசிக் கொண்டே போனார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உளறிக் கொட்டியதால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு கிருஷ்ணாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க நேரிட்டது.

அதன் பிறகுதான் தான் என்ன பேசினோம் என்பதை உணர்ந்தார் கிருஷ்ணா. இருப்பினும் தான் தவறாகப் பேசியது குறித்து உறுப்பினர்களிடம் அவர் விளக்கவில்லை. மாறாக வழக்கமான புன்னகையுடன் அமர்ந்து கொண்டார்.

எஸ்.எம்.கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே எதையாவது ஒரு குழப்பம் செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். டெல்லியில் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினசரி அலுவலகம் வந்து முதலில் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் ஐ.நா. சபையில் பேசும்போது மெக்ஸிகோ நாட்டு அமைச்சரின் உரையைப் படித்து சொதப்பினார். சமீபத்தில் விம்பிள்டனுக்குப் போய் டென்னிஸ் பார்த்து விட்டு வந்து சர்ச்சையில் .சிக்கினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.