“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் ‘பெரும் மகிழ்ச்சி’ அடைந்தவர் யாராக இருக்கும்?. அதிக சீட்கள் ஜெயித்தும் ஆட்சியில் அமர முடியாமல் தவித்த தேவேந்திர ஃபட்நாவிஸா?

சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்ததற்காக முதல்வர் பதவியே பரிசாக பெற்ற
ஏக்நாத் ஷிண்டேயா?

தொடர் தோல்விகளால் அரசியல் எதிர்காலமே இனி கிடையாது என்று சோர்வில் இருந்த
ராஜ் தாக்கரேவா?

ஆட்சியாளர்களை எதிர்த்ததால் மும்பையில் கால்வைக்க முடியாது என்று மிரட்டப்பட்டதோடு, வீட்டையும் இடித்ததால் பாதிக்கப்பட்ட நடிகை
கங்கனா ரனாவத்தா?

போதைபொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகனை கைதுசெய்ததால், மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக்கால் குறிவைக்கப்பட்டு நெருக்கடிக்கு ஆளான அதிகாரி
சமீர் வான்கடேயா?

மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களின் முறைகேடுகளை சாடியதால், பொய் வழக்குகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியா?,

ஹிந்துத்துவாவை கைவிட கூடாது. அதை மீண்டும் உத்தவ் தாக்கரேக்கு ஞாபகப்படுத்த வீட்டுக்கு முன்பு ஹனுமன் சாலிசா பாடுவோம் என்று சொன்னதற்காக, உயிர், உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட
ரானா தம்பதியாரா?

இவர்களைப் போல பலரும் பலவிதமாக
மஹாராஷ்டிராவின்
மஹா விகாஸ் அகாடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை விட்டு சிவசேனா கூட்டணி பதவி விலகிய செய்தியறிந்ததும் இவர்கள் யாரையும் விட பெரும் மகிழ்ச்சி அடைந்த ஒருவர் இருக்கிறார்.
அவர் யாரென்று தெரியுமா?

வேறு ஒரு நபர் எழுதியதை குறிப்பிட்டு
ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து

“நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது” என்று பதிவிட்டதற்காக மாநிலம் முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதவு செய்யப்பட்டு கொலை மிரட்டல்களை சந்தித்து
சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்து வந்த மஹாராஷ்டிர நடிகை “கேதகி சிதாலே”

“சூழ்ச்சியாளர்களும் வீழ்த்தப்படுவார்கள்”

நன்றி வைரவேல் சுப்பையா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...