நாடுமுழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மார்ச் 2018-க்குள் மின்வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2017 – 2018-ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல்செய்தார்.
மத்திய அமைச்சர் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் 'கிராமப்புறமேம்பாடு' தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
* கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறுதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
* பிரதம மந்திரி கிராமப்புறசாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப் புறங்களிலும் மின்வசதி செய்து தரப்படும்.
* நாடுமுழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப் படுத்தப்பட்டு பொது மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடி நீர் வழங்கப்படும்.
* கிராமப்புற சுகாதாரம் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
* கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடபயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.