கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது. இது வரை 3 கட்டதேர்தல் முடிந்துவிட்டது. 4-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில் உத்தரபிரதேச மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வாக்களித்து வருகின்றனர்.

இந்ததேர்தலில், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப்போட்டி உள்ளது. கடந்த 21-ம் தேதி உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டமொன்றில் பேசினார். அப்போது குஜராத் கழுதைகளுக்காக அமிதாப்பச்சன் விளம்பரம்செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பிரதமர் மோடி பேசும்போது, கழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் என பதிலடிகொடுத்துள்ளார்.

உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கட்டாயத்தின் பேரிலேயே நீங்கள் (சமாஜ்வாடி) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். உத்தரபிரதேசத்தில் மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி உங்களையும் சேர்த்து அழைத்துசெல்கிறது. குஜராத் கழுதைகளைப் பார்த்து அகிலேஷ் பயந்துவிட்டார். கழுதைகள் என்றும் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாகஇருக்கும்.

அகிலேஷ் என்னைத் தாக்கிப்பேசினாரா? இல்லை பாஜக.வை  தாக்கிப் பேசினாரா? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கழுதைகளை அவர் தாக்கிப்பேசியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, கழுதைகள் புகைப் படத்துடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப்புகள் குஜராத்தில் வெளியானதை அகிலேஷ்  அறிந்துகொள்ள வேண்டும். உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அவர்களின் பெயரால் நீங்கள் வாக்குக்கேட்டால் உங்கள் ஆட்சி உத்தர பிரதேசத்தில் அமைய வாய்ப்பில்லை இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...