கோவா மாநிலத்தில், திடீர் திருப்பமாக, பா.ஜ., ஆட்சி அமைக்க, சிறிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது . ராணுவ அமைச்சர், மனோகர் பரீக்கர், மீண்டும் கோவா முதல்வராக பொறுப்பேற்கிறார்; அவர் கவர்னரை சந்தித்து உரிமைகோரினார்.
இது பரீக்கரின் எளிமைக்கும். நேர்மைக்கும். அணுகு முறைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. ஐ.ஐ.டி., பட்டதாரியான மனோகர் பரிக்கர், புத்திசாலி என பெயர் எடுத்தவர். அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் நெருக்கமான பழக்கத்தை மேற்கொள்பவர். எனவே .பரிக்கர் முதல்வரானால் மட்டுமே ஆதரவு தருவோம் என குட்டிக் கட்சிகள் கூறி விட்டன. இதுவே மனோகரின் எளிமைக்கும் அணுகுமுறைக்கம் கிடைத்த வெற்றி.
மற்ற கட்சிகள் மட்டுமல்லாது, மற்றமதங்கள், ஜாதிகளையும் அரவணைத்து செல்வதில் பரிக்கர் பெயர் எடுத்தவர். ஏற்கனவே முதல்வராக இருந்தபோது, பரிக்கரின் நிர்வாக திறமை, நாடுமுழுவதும் போற்றப்பட்டது. இதுவும் பரிக்கர் முதல்வராக வழிவகுத்துள்ளது.
.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.