பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ்வங்கி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒருகோடி பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, குறிப்பிட்ட சிலநகரங்களில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ்வங்கிக்கு அனுமதி வழங்கி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று எழுப்பியகேள்விக்கு மத்திய இணைமந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனைமேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப் பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ்வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.