உத்தரப் பிரதேசத்தில் ஜாதி, மத ரீதியில் பாஜ அரசு பாகுபாடு பார்க்க வில்லை’’ என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விளக்கம் அளித்தார். உத்தரப்பிரதேச காவல் துறையில் ‘ஆன்ட்டி ரோமியோ’ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஈவ் டீசிங் செய்பவர்கள், பெண்கள்பின்னால் சுற்றும் இளைஞர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இது குறித்து மக்களவையின் ஜீரோ நேரத்தில் நேற்றுபேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன், ‘‘உத்தரப் பிரதேசத்தில் சில சமூகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆன்ட்டிரோமியோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
காதல் வசப்படுவது தவறா? பாய்பிரண்ட் மற்றும் கேர்ள் பிரண்ட் வைத்திருப்பது தவறா? பூங்காங்களில் எப்படி உட்காரவேண்டும் என இளஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் அரசு சொல்லிக்கொடுக்க விரும்புகிறதா? என்பதை அறிய விரும்புகிறேன்’’ என்றார். இதற்கு பதில்அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘‘ஜாதி, மத ரீதியாக பா.ஜ எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. உத்தர பிரதேசத்தில் பா.ஜ ஆட்சிக்குவந்து சில நாட்கள்தான் ஆகிறது. இதுபோல் குறிப்பிடும்படியாக ஏதாவதுசம்பவம் நடந்திருந்தால் அதுகுறித்து அரசு விசாரிக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த முயற்சியில் கவனம் செலுத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்’’ என்றார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.