கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர்மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்ட்ரி ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தகவல் பரவிவருகிறதே?. அது உண்மையா? என கேள்வி எழுப்பினார்.
மத்திய உள்துறை விவகார இணைமந்திரி கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும்வதந்தி தான். ரூ.2,000 கள்ளநோட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய ரூ.2,000 நோட்டுகளில் பல்வேறுபாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே 100 சதவீதம் அதை கள்ளநோட்டாக தயாரிக்க முடியாது. அப்படியே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் அதை எளிதாக கண்டறியலாம். இதுதொடர்பாக ரிசர்வ்வங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய எல்லையில் உள்ள மேற்குவங்காளம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று கூறிஉள்ளார். பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் புதிய கள்ள நோட்டுகள் வங்காளதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.