என் பதவியை பறித்தால் ஆட்சி கவிழும்..
எடப்பாடியிடம் எகிறும் விஜயபாஸ்கர்
'நான் மட்டும்தானா குற்றவாளி..?
.உங்கள் கதையைச் சொல்லவா?'
என கூறி, எடப்பாடியை மிரட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிவருவதாகவும், அவரை பதவி விலக வைக்க, கடுமையாகப் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய புகாரின் அடிப்படையில், கடந்த 7-ம் தேதி விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை.
எங்கே உள்ளார் விஜய பாஸ்கர்?
இந்தச் சோதனையில் அவர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ‘ஆவணங்களுக்குக் கணக்கு காட்டுகிறேன்' எனப் பதில் அளித்தவர், தற்போது வரையில் எங்கு தங்கியிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
விஜயபாஸ்கர் ஒரு ஆல்ரவுண்டர்….
தினகரன் மௌனம் சாதிப்பதற்கும் முக்கியக் காரணம் இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக கார்டனில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் விஜயபாஸ்கர். மணல் முதற்கொண்டு ஏராளமான தொழில்களில் இருந்து கார்டனின் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு பெரும் தொகை கை மாறியிருக்கிறது. ‘
ரகசியம் தெரிந்தவர்…..
‘உங்கள் கணக்கு வழக்குகளில் இன்னும் நேர்மையை எதிர்பார்க்கிறோம்' என அவரிடம் நேரடியாகக் கூறிய வரலாறுகளும் உண்டு. ஆனாலும் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அவருடைய சொந்த சமூகத்து மக்களே அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியபோதும், அவருடைய பதவியைக் காப்பாற்றினார் சசிகலா. சொல்லப் போனால் கார்டனின் அனைத்து ரகசியங்களையும் முழுமையாக அறிந்தவர் அவர்.
அப்பல்லோ மர்மங்கள்…..
‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்' என வற்புறுத்தினால், தங்களை நோக்கி ஆயுதம் திரும்பும் என்ற கவலைதான் தினகரனை வாட்டி வதைக்கிறது' என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 'உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த மருந்துகள், சிகிச்சை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள், எம்பாமிங் நடவடிக்கைகள் என அனைத்தும் விஜயபாஸ்கரின் ஒப்புதலோடுதான் நடத்தப்பட்டன. அவருடைய மரணம் இந்தளவுக்கு மர்மமாக இருப்பதற்கும் அவர்தான் காரணம். தன்னிடம் இருந்து பதவி பறிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை.
எடப்பாடி மீது சீற்றம்…..
‘நீங்கள் சொல்லித்தானே அனைத்தையும் செய்தேன்.நான் மட்டும் ஏன் பலிகடாவாக்கப்பட வேண்டும்?
எடப்பாடி மட்டும் நல்லவர் ஆகிவிட்டாரா? என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்' எனக் கொதித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.. நாளை மறுநாள் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட கேள்விகளை எதிர் கொள்ள இருக்கிறார் விஜயபாஸ்கர். ‘அதற்குள் அவரைப் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும்' என்ற நெருக்கடியில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.