பிஜேபி-யின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்தது. தேசிய தலைவர் அமித் ஷா, கூட்டத்தை தொடக்கிவைத்தார். பிஜேபி-யின் 13 மாநில முதல்வர்கள், 45 மத்தியஅமைச்சர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட தேசியசெயற்குழு உறுப்பினர்கள் இந்தகூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி முன்னிலையில் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், '' நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற போது, இதுதான் பி.ஜே.பி-யின் உச்ச நிலை வெற்றி என்று சொன்னார்கள். ஆனால், அதோடு நிற்காமல் நாம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுவருகிறோம். நாட்டில் மேற்கிலும் மத்திய பகுதிகளிலும் நாம் பெற்றவெற்றிகளும், கிழக்கில் அஸ்ஸாமிலும், மணிப் பூரிலும் பெற்ற வெற்றிகளும் தொடக்க நிலைதான்.
தெற்கிலும், கிழக்கிலும் நாம் வெற்றிபெற வேண்டாமா ? அதற்கு நாம், உழைத்து கொண்டே இருக்கவேண்டும். இப்போது 13 மாநிலங்களில் நமது ஆட்சி. இதுபோதுமா? இன்னும் நாம் நிறையவெற்றிகளை பெற வேண்டியது இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நமது கொடி பறக்கவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இது தான் நம்முன் நிற்கும் இப்போதைய கேள்வி?
சென்ற ஆண்டு தேசியசெயற்குழு கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல்களைப் பற்றி தீர்மானம் எடுத்தோம். அதை ஓரளவுக்குசெய்தும் இருக்கிறோம். இப்போது, அடுத்துவரவுள்ள இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக சட்ட மன்றங்களுக்கு தேர்தல்களிலும் இதேபோன்ற தீர்மானத்துடன் வேலைசெய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையில் நமது முதல்வர்கள் தேசியசெயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல்முறை.
வரும் செப்டம்பருக்குள் தேர்தல்வர இருக்கும் மாநிலத்தில் கட்சியினரை சந்திக்க 95 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறேன். கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மாதத்தில் 15 நாட்களை தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஒடிஸா போன்ற பி.ஜே.பி பலம்குறைவாக இருக்கும் மாநிலங்களில் செலவிடவேண்டும். தேசியசெயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்தநிர்வாகிகள், வாக்குச்சாவடி அளவில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கட்சியை பலப் படுத்தும் வேலைகளை செய்யவேண்டும்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முடிந்த பி.ஜே.பி-யால் வலுவாக இருக்கும் மாநிலக்கட்சிகளை தோற்கடிக்க முடியாதா? உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்தது? மாயாவதி, முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் கணக்குகளை முடித்து விட்டோம் அல்லவா? இது நம்முடைய திட்டமிட்ட உழைப்பால் தான் முடிந்தது. இடது சாரிகளை கேரளாவிலும், திரிபுராவிலும் தோற்கடித்து ‘தாமரையை மலர’ வைக்க வேண்டும்.
சொல்லும்செயலும் ஒன்றாக இருப்பதால் தான் மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல், பி.ஜே.பி செயல்படும் கட்சியாக இருப்பதால்தான் அறுதிபெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொடுத்தார்கள். உத்தரப் பிரதேசத்திலும் மகத்தான வெற்றியை தந்தார்கள். சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது மக்கள் நல கொள்கைகளை மோடி அரசு மேற்கொண்டது தான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்குப்பிறகு மிகவும் பிரபலமானத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை இதரக்கட்சிகள் இரண்டு-மூன்றுமுறை ஆட்சியை கைப்பற்றிய போதும் செய்தது கிடையாது.
இது தினதயாள் உபாத்யாவின் நூற்றாண்டுவிழா. டெல்லியில் கடந்தமுறை நடந்த, தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சி பணியாற்ற முழு அர்பணிப் புடைய சேவகர்கள் தேவை என்று அழைப்புவிடுத்து இருந்தோம். அதன்படி 2,470 பேர் ஓராண்டு முழுநேர ஊழியர்களாகவும் 1,441 பேர் ஆறுமாதத்திற்கும் 3,78,000 பேர் 15 நாட்களுக்கு பணி செய்யவும் தங்களதுபெயர்களை பதிவுசெய்துள்ளார்கள். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம்வரை பி.ஜே.பி ஆட்சி செய்யும்பொற்காலம் மலர இருக்கிறது. பி.ஜே.பி இதுவரை பலம்பெறாத மாநிலங்களில் பலம்பெறுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இப்போது கிடைத்துள்ள வெற்றிகளைக் கொண்டு நாம் திருப்தி அடையக் கூடாது'' என்று பேசினார்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.