அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா கட்சிக்கோ,மத்திய அரசுக்கோ பங்குஇல்லை என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
இந்தியாவில் உருவாக் குவோம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுகநிகழ்வு மற்றும் செய்திகளுக்கான ஹெüடி டூ புதியசெயலி அறிமுக விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பழங்குடியின மக்கள் விவகாரத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் புதிய செயலியைத் தொடங்கிவைத்து பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ளசெயலியைக் காட்டிலும் ஹெüடி டூ செயலியில் 1 லட்சம் பேரை இணைக்க முடியும். பொதுமக்கள் 36 நாடுகளின் பணத்தை இச் செயலியின் மூலம் செலுத்த முடியும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக்கொண்ட செயலியை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைவதாகத் தெரிவித்தார்.
இந்தவிழாவில் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் துணை தலைமை தணிக்கை அதிகாரி எஸ்.சத்திய மூர்த்தி, நடிகர் விஷால், வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ், டிஐடபிள்யு மேலாண் பங்குதாரர் மோஹித் ரல்ஹான், ஹெüடி டூ தலைவர் சேவியர் பிரிட்டோ, தலைமை செயலர் அதிகாரி சுதாகர் ராஜா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு அடுத்தது யார்வாரிசு எனத் தெரிவிக்காமல் மறைந்ததால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த உட்கட்சிவிவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கில்லை. சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது வருமானவரித்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதாவை குற்றம் சாட்டுவது திசை திருப்பு முயற்சியாகும் என்றார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.