4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியது

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருள்ளூர் மாவட்டத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.  நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பட்டு, திருவெள்ளைவாயல், பொன்னேரி, அத்திப்பேடு, அண்ணாமலைச்சேரி, திருப்பாளைவனம், இளவெம்பேடு, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், வீராணத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், ஆர்கே பேட்டை, செம்பேடு, பூனிமாங்காடு, கோரமங்கலம், ஆகிய பகுதிகளில் இந்த சேவை 2024 ஜூலை 5 அன்று தொடங்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை தொலைபேசி, தலைமைப் பொது மேலாளர் பாப்பா சுதாகர்ராவ், இந்த சேவைகளைத் தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய 4ஜி சேவை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ.16.25 கோடியாகும்.

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள பாகுபாட்டை நீக்கி ஊரகப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியை இது காட்டுகிறது. இந்தப் பகுதிகளில் 4ஜி சேவைகளின் அறிமுகம், கல்வி, வணிகம், குடிமக்களுக்கு அதிகாரம் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தொலைபேசியின் IX.2 திட்டத்திற்கு 2,114 4-ஜி கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4ஜி சேவைகள்  விரைவில் சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களையும்  உள்ளடக்கியதாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...