கீழடியிலே #அகழ்வாராய்வு என்பதே 2015 இல் தான் ஆரம்பிக்கிறது ஆனால் அங்கே முதுமக்கள் தாழீ இருப்பதை எல்லாம் கண்டுபிடித்து தொல்லியல் துறைக்கு சொன்னது 1974 இல் இருந்தே. கீழடியிலே ஆசிரியராக பணியாற்றிய பாலசுப்ரமணியம் என்பவர் அங்கே பல #முதுமக்கள் தாழிகளை கண்டறிந்து அதைதன்னுடைய பள்ளிக்கூடத்திலேயே சேகரித்து வைத்திருக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பை 1974 இல் இருந்து 2014 வரை எல்லோருக்கும் சொல்லிப்பார்க்கிறார். யாரும் கேட்கவில்லை. இன்றைக்கு கீழடி கீழடி என பஞ்சப்பாட்டு பாடி டப்பா குலுக்கு கட்சிகளுக்கு கூட இவர் யார் என தெரியுமா என தெரியவில்லை.
2014 இல் மத்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையிலே அதிகாரியாக இருக்கும் அமர்நாத் என்பவர் பாலசுப்ரமணியத்தை அணுகி விவரங்களை பெறுகிறார். இந்த அமர்நாத் என்பவர் தொல்லியல் துறையில் ஐந்தாம் தோண்டல் பிரிவின் மேற்பார்வை அதிகாரியாக இருப்பவர். தொல்லியல் துறையின் ஐந்தாம் தோண்டல் பிரிவு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது.
ஐந்தாம் தோண்டல்பிரிவு தன்னுடைய முதல்கட்ட ஆய்வு அறிக்கையை 2015 இல் அளிக்கிறது. 200 மேற்பட்ட இடங்களிலே வைகையாற்றின் கரைகளிலே தோண்டலாம் என அறிக்கை தெரிவித்ததை தொடர்ந்து முதல் தோண்டல் 2015 இல் ஆரம்பம் ஆகிறது.
2014 இல் ஆரம்பித்து உடனே முடித்துவிட்டார்களா என கேட்டால், உண்மையிலே 2013 இல் இருந்தே தேடுதல் நடவடிக்கைகளை வைகையாற்றின் கரையிலே மத்திய தொல்துறை நடத்தி வந்தது. அதன் ஒரு பகுதி தான் கீழடி ஆசிரியரான பாலசுப்ரமணியத்தை சந்தித்ததும்.
முதல் கட்ட அறிக்கையிலே வைகையாற்றங்கரையிலே 3000 வருடங்களுக்கு மேல் பழைமையான நகரம் இருக்கலாம் என சொல்லிவிட்டது தொல்லியல் துறை. கவனிங்க இருக்கலாம் தான். ஆனால் நீருபிக்க ஆதாரங்கள் வேண்டும் அல்லவா? அதற்கு அடுத்த கட்ட தோண்டலுக்கு அனுமதி அளித்தது.
2015 இல் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிலே கிட்டத்தட்ட 80 ஏக்கராவிலே தோண்டிய குழிகள் 53. இது அனைத்தும் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள். போனவாரம் மத்திய அமைச்சர்கள் வந்த போது பார்த்திருக்கலாம், சுற்றிலும் தென்னை மரங்கள் தான்.
தோண்டிய பொழுது, பழைய பானைகள், எழுதப்பட்ட ஓடுகள், அணிகள், அணிகளிலே பதிக்கப்பட்ட கற்கள் என பலதும் கிடைக்கின்றன. எழுத்துக்களிலே பிராமியும் சமஸ்கிருதமும் கிடைக்கிறது. ஆமாம் சமஸ்கிருதமும் சேர்த்தித்தான்.
மக்கள் வசித்தற்கான அடையாளங்கள், கழிவு நீர் ஓட கட்டபட்ட அமைப்புகள் என ஒரு பெரு நகரமே இருந்த அடையாங்கள் தெரிகின்றன. ஆனால் ஹரப்பா போல் தோண்டவில்லை காரணம்? தோண்டப்பட்டது தான் தனியார் இடம் அதுவும் தென்னை மரங்களுக்கு நடுவே. ஆறடிக்கு ஆறடி தான் தோண்டமுடியும்.
இந்த தோண்டுவதற்கும் நில உரிமையாளர்களிடம் தோண்டும் பகுதி முடிந்தவுடனே திரும்பவும் மண் போட்டு மூடி கொடுத்துவிடுவதாக சொல்லித்தான் தோண்ட அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அந்த குழிகள் திறந்தே இருக்கவேண்டும் என்றால் மழை நீர் உள்ளே வராமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
முழுமையாக செய்யவேண்டும் என்றால் அந்த பகுதியிலே இருக்கும் 100-200 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி மத்திய தொல்லியல் துறையிலே கொடுத்தால் மட்டும் நடக்கும். இன்றைக்கு பேசும் ஆட்கள் செய்வார்களா? வெறும் ரண்டு ஏக்கராவுக்கே வழியக்காணமாம்?
சரி மத்திய அரசே கையகப்படுத்தவேண்டியது தானேன்னா? அதான் மத்திய அரசுக்கு நிலகையகப்படுத்தும் உரிமை இல்லைன்னு போராடி ஒழிச்சிட்டாங்களே?
அடுத்து இங்கிருக்கும் பொருட்களை ஏன் பெங்களூருவுக்கும் டேராடூனுக்கும் எடுத்துப்போகவேண்டும்?
முதல் காரணம், கார்பன் டேட்டிங் எனப்படும் கால நிர்ணயம் செய்யவேண்டிய முறை தமிழ்நாட்டிலே கிடையாது. டேராடூனிலே மாதிரிகள் சேகரிப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும். முழுமையாக காலநிர்ணயம் செய்யப்பட்டால் ஒழிய 3000 வருட கதை வெறும் கட்டுக்கதையாகவே இருக்கும்.
இரண்டாவது, இந்த பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு மற்ற நாகரீங்களிலே கிடைத்த பொருட்களுடன் ஒப்பிடப்பட்டு வணிகம், பரிமாற்றம் முதலியவை நிகழந்ததா என்பவை உறுதி செய்யப்படவேண்டும். அதை கீழடியிலே ஓலைக்கொட்டாய்க்கு கீழே அமர்ந்து செய்யமுடியாது. இடங்களும் பலநூறு ஆட்களும் தேவை. அது பெங்களூருவிலே தென்னிந்தியாவுக்கு இருக்கிறது.
சரி இன்னும் அகழ்வாராய்ச்சி தொடரும் என்கிறார்களே அது எப்படி?
இதே போல் இருக்கும் இடங்களிலே இதே போல் குழிகள் தோண்டி அங்கேயும் இப்படி இருக்கிறதா என பார்ப்பார்கள். இருக்குமாயின் என்ன சுற்றளவிலே எவ்வளவு ஆழத்திலே இவை எல்லாம் கிடைக்கிறன என்பதை பொறுத்து ஹரப்பா போல் ஒரு பெரிய தோண்டல் இடமாக இது ஆகலாம். ஆனால் அதற்கெல்லாம் இன்னும் 10-15 வருடங்கள் ஆகும்.
சரி அப்படியானால் ஏன் இந்த தமிழ்நாட்டு டப்பாகுலுக்கி கட்சிகள் பிரச்சினை செய்கிறன?
இந்த டப்பா குலுக்கி கட்சிகள் முன்வைப்பது கீழடியிலே தமிழர் நாகரீகம் தான் கிடைத்திருக்கிறது. வேதகால நாகரீகம் இல்லை எனவே மத்திய அரசு இதை தடுக்கிறது என. இது ஒரு லூசுத்தனமான வாதம். முழுமையாக இன்னும் தோண்டவில்லை அதற்குள்ளே எப்படி முடிவு கட்டுவது?
இதற்கு முன்பு இருந்த கொடுமணல் ஏன் இங்கே பல்லாவரத்திலே கிடைக்கும் பழங்கால பொருட்களை எல்லாம் ஒழுங்காக தோண்டிவிட்டார்களா என்ன? பல்லாவரத்திலே முதுமக்கள் தாழி கிடைக்கிறது என்பதே இந்த தீடீர் குபீர் புரச்சியாலர்களுக்கு தெரியாது. இப்போது அதன் மேல் பிளாட் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
எதையேனும் சொல்லி டப்பா குலுக்கி குவாட்டருக்கும் பிரியாணிக்கும் காசு தேற்றவேண்டும் என்பதை தவிர இந்த டப்பாகுலுக்கி கட்சிகளுக்கு வேறு ஏதும் தெரியாது.
எங்கே முடிந்தால் ஒரு 200 ஏக்கராவை கையகப்படுத்தி கொடுத்து ஒரு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி முழுமையாக தோண்டட்டுமே?
1970 இல் இருந்து 45 வருடங்களாக இதை கிடப்பிலே போட்டுவிட்டு பிஜேபி வந்தவுடனே டப்பாகுலுக்கிகளுக்கு டமிழ் உணர்வு பொத்துக்கிட்டு வருகிறது என்றால் என்ன மானங்கெட்ட உணர்வு என மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.