தேசிய தலைநகர் டெல்லியை ஓராண்டுக்குள் குப்பைஅற்ற நகரமாக மாற்றும்பணியில் முனைப்பு காட்டி செயல்படுங்கள் என புதிய மாநகராட்சி உறுப்பினர்களுக்கு மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி அறிவுறுத்தி உள்ளார். கடந்தமாதம் 23ம் தேதி கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 272 வார்டுகளில், பாஜ 181 வார்டுகளை கைப்பற்றியது. இந்நிலையில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்றுநடைபெற்றது.
இதில் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி பேசியதாவது. தேர்தலுக்கு முன்பாக கட்சியின் சங்கல்ப பத்ராவில் (தேர்தல் வாக்குறுதிகள்) கூறப்பட்ட வைகளை நிறைவேற்றும் மாபெரும்பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
டெல்லி குறித்த பிரதமரின் கனவை நனவாக்கும் கடமையும் உங்களுக்குள்ளது. குறிப்பாக டெல்லியை குப்பைகளற்ற நகரமாக மாற்றவேண்டும். அடுத்த 365 நாட்களுக்கு எப்பகுதியிலும் 24 மணிநேரத்துக்கு மேல் குப்பை குவியக்கூடாது. இரண்டு ஆண்டுகளுக்கும் மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கூறினார். கவுன்சிலர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் குறித்து பாஜவின் தேசிய துணைத்தலைவரும், டெல்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜூ எடுத்துரைத்தார். மக்கள் பாஜவின் நம்பிக்கைவைத்து மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பது நமதுபொறுப்பாகும் என்றார். இந்தகூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, தேசிய செயலாளர் ஆர் பி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.