ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற் சாலைகளிலிருந்து பன்னாட்டு ஏற்றுமதிக்காக சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் வந்துசெல்ல, இப்போதுள்ள நெருக்கடியான சாலை சரிப்பட்டுவராது என்று சிறப்பு வழித்தடம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மதுர வாயல் வரை ஏற்கெனவே உள்ள சாலை வழியாக வாகனங்கள் வரவும் அதன் பின்னர், சென்னை துறைமுகம்வரை மேல்மட்ட சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது.
இந்தத் திட்டத்தை, 2007 ஆம் ஆண்டு மதுரவாயலில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின்படி, கூவம் ஆற்றின் ஓரமாகத் தூண்கள்அமைத்து, அதன் மேல் சாலை அமைக்க வேண்டும். 1,815 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத்திட்டத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிதி ஒதுக்கீடு செய்தது. துறைமுகம்-மதுரவாயல் இடையிலான 18.3 கி.மீ தூரத்துக்கு இந்தப்பறக்கும் சாலையை உருவாக்கினால், 30 நிமிடங்களில் இந்ததூரத்தை சரக்கு வாகனங்கள் கடந்துசெல்ல முடியும்.
இந்தத் திட்டத்துக்காக, நில ஆர்ஜிதம் செய்து தூண்கள் அமைக்கப்பட்டு, 15 சதவிகிதப் பணிகள் முடிந்தநிலையில், தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. கூவம் ஆற்றின் நீர் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்தத்திட்டம் அமைந்துள்ளது என்று இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டைபோட்டது. அதன் பின்னர், பி.ஜே.பி அரசு பல தடவை தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்துக்கு இப்போது தமிழக அரசு தடையில்லாச் சான்று வழங்கியிருக்கிறது. ஆறு ஆண்டுகளாகக் கிடப்பிலிருந்த பறக்கும்சாலைத் திட்டம் இப்போது உயிர்பெற்றுள்ளது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.