ராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை கூட்டுநிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு இந்தியாவும், ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து ரஷியா சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வியாழக் கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகள் குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.
பின்னர், விளாதிமீர் புதின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது சந்திப்பு எப்போதும் நட்புறவோடும், ஆக்கப் பூர்வமானதாகவும் இருக்கும். அதுபோலவே முறை நடைபெற்ற சந்திப்பும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது.
இந்தியா- ரஷியா இடையே அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியதுறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் எங்களது பேச்சுவார்த்தை இருந்தது.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்தநிலையில், நிகழாண்டின் முதல் பகுதியில் மீண்டும் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மருந்து தயாரிப்பு, விமானங்கள் மற்றும் வாகனங்கள் தயாரிப்பு, வைரத்தொழில், விவசாயம் ஆகியவற்றுக்காக, கூட்டு நிறுவனங்களை உருவாக்கும் வகையில், 19 திட்டங்களுக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இவை அனைத்தும், இந்தியா-ரஷியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆக்கப் பூர்வ பயணத்தை ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.
அதன்படி, இந்தியாவுக்கு அதி நவீன ராணுவ உபகரணங்களை அனுப்புவதோடு நின்றுவிடாமல், ரஷியாவின் பங்களிப்புடன் இந்தியாவில் ராணுவ வாகனங்களைக் கட்டும்தளம் உருவாக்கப்படும். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் மின்உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், போக்கு வரத்து உள்கட்டமைப்பு வசதிகள், உருக்குத் தொழிற்சாலை ஆகியவற்றை ரஷியா அமைத்து கொடுத்திருக்கிறது. இந்தியாவும், ரஷியாவும் இணைந்தே வளர்ந்திருப்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம் என்றார் அவர்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.