நான் தவறு செய்திரு க்கலாம். ஆனால், ஒருபோதும் ஊழலுக்கு துணைபோனது கிடையாது, ஊழலின் மூலம் நான் சொத்துகுவித்துள்ளதாக, எதிர் கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ஆய்வுசெய்யலாம்,” என்று , பிரதமர் மன்மோகன்சிங், லோக்சபாவில் பேசியுள்ளார் .
லோக்சபாவில் நேற்று, ஊழல்தொடர்பாக நடந்த விவாததுக்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: ஊழல் நமக்கு மிகபெரிய சவாலாக உள்ளது என்பதில் சந்தேகம்_இல்லை. அதை ஒழிக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தாக்கல்செய்துள்ள லோக்பால் மசோதா, ஜன்லோக்பால் மசோதா, அருணாராயின் மசோதா ஆகியவை குறித்து_விவாதிக்க, அரசு தயாராக இருக்கிறது . விவாதத்துக்கு பிறகு , நிலைகுழுவின் பரிசீலனைக்கு, மசோதா அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார் .
இந்த 7 வருடத்தில் தான். விண்ணை தொடும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. (2004-2011). பல லட்சம் கோடிகளில். திருடர்களுக்கு பூட்டை தான் உடைக்க உதவினேன்……..நான் திருடவில்லை என்று சொல்கிறீர்களா?, உண்மையிலேயே ஊழலுக்கு துணைபோக வில்லை என்றால் ஜன்லோக்பாலை உடனடியாக கொண்டு வர வேண்டியதுதானே ?
ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்துவதை எந்த குடிமகனும் எதிர்க்க மாட்டான். ஏதோ ஒருவகையில் அனைவரும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.