பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம்

நாகர்கோவில்: மத்திய அரசின் நலத் திட்டங்ளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரத்தொடங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் மத்திய அரசின் சாதனைவிளக்க கண்காட்சியில் நேற்று கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:


காஷ்மீரில் முதன்முறையாக  காரில் சுற்றுப்பயணம் செய்த பிரதமராக மோடி இடம்பெற்றுள்ளார். ரயில்வேத் துறை தனியார் மயமாகாது என அத்துறை அமைச்சரே கூறியுள்ளார்.

ரயில்வே குறைகளை டிவிட்டரில் பதிவிட்டால் அது அமைசசரின் கவனத்திற்கே சென்று, அடுத்தரயில் நிலையம் வருவதற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதுபோல் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பிரச்னையும் சுஷ்மாவின் நேரடி கவனத்துக்கு செல்கிறது. இனயம் துறைமுக திட்டம்வந்தே தீரும். இதற்கு சிலரின், சில அமைப்புகளின் சுயநலம்தான் தடையாக உள்ளது. இதன்மூலம் முதல்பயன் அந்த மீனவ கிராம மக்களுக்குத்தான்.  
திருவனந்தபுரம் – கன்னியாகுமரி – தூத்துக்குடி -பாண்டிச்சேரி – சென்னை கடல்வழி போக்குவரத்திற்கு ரூ.200 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் வறட்சியால் ரூ.40 ஆயிரம்கோடி பாதிப்பு என மாநில அரசு கூறியுள்ளது. மோடி அரசு ஏழை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக  புதிய பயிர்காப்பீடு திட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்படி ரூ.100 நஷ்டஈடுபெற விவசாயி ரூ.2மட்டும் செலுத்தினால் போதும். மத்திய அரசு அவரது கணக்கில் ரூ.9ம், மாநில அரசு ரூ.9ம் செலுத்தும். ஆக மொத்தம் மொத்தம் ரூ.20 செலுத்தப்படும்.

இதில் தமிழக அரசு அக்கறை செலுத்தாமல் விவசாயிகளிடம் இந்ததிட்டத்தை கொண்டு செல்லாமல் இருந்ததால் வெறும் ரூ.1,848 கோடி மட்டுமே மத்திய அரசால் வழங்கமுடிந்தது. பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்காததற்கு மாநில அரசேகாரணம். தற்போதுதான் தமிழக அரசு மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரத் தொடங்கியுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என எழுத்துபூர்வமாக தமிழக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்தால் உடனடியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...