ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும்வதந்தியே எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் ஒரே சீரானவரி விதிப்பு முறையை கொண்டுவரும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி முறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம்செய்ய உள்ளது. பார்லியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
தொடரந்து பல்வேறுபொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களையும் மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே ஜி.எஸ்.டி., அமலாகும்தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித்மிஸ்ரா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும்வதந்தி என தெரிவித்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.