தஞ்சை பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை அமைக்க நிலஅளவை மேற்கொண்டு 30 ஆண்டுகளாகியும் இது வரை பணிகள் தொடங்கபடவில்லை.
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத் திறனாளி மறுவாழ்வு_அலுவலகம் போன்றவற்றுக்காகவும், கல்வி, மருத்துவ தேவைக்காகவும் நாள்தோறும் ஆயிரத்துக்கு அதிகமானோர் தஞ்சைக்கு சென்றுவருகின்றனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நெரிசலில் நாள்தோறும் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தொடர்ந்துசெல்லும் நிலை உள்ளது. எனவே, தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே ரயில்பாதை அமைக்க வேண்டும் என இந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 1980-ம் ஆண்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1986-ல் இந்த வழித் தடத்தில் ரயில் பாதை அமைக்கத் தேவையான இடத்தைக்கையகப்படுத்த பல இடங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார்செய்யப்பட்டன. ஆனால், தொடர்ந்து ரயில்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கபடாமல் திட்டம் கிடப்பில் போடபட்டது.
ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி, இந்தப் பகுதியில் உள்ள பல ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரயில்வே அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து ஒரத்தநாடு வட்டம், உறந்தரையன்குடிக்காடு பகுதியைச் சேர்ந்த புலவர் மாணிக்கம் கூறியதாவது:
கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வரை புதிய ரயில்பாதை அமைப்பதற்கு ஒரத்தநாடு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தபட்டது. அதில் என்னுடைய நிலங்களும் அடங்கும்.
ரயில்வே துறை சார்பாக நிலம் அளக்கபட்டு, அதற்கு அடையாளமாக ஊன்றபட்ட கல் இன்றும் அப்படியே உள்ளது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து ஏற்பட்டால்தான் இந்தப்பகுதி மக்கள் நெரிசல் இன்றி பயணம்செய்ய இயலும். இது தொடர்பாக கடந்த பலஆண்டுகளாக ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை எவ்விதநடவடிக்கையும் இல்லை என்றார்
தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டால், தஞ்சாவூர்- அரியலூர் இடையே ரயில் இயக்கப்படும் பட்சத்தில் ராமேசுவரத்திலிருந்து பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் வழியாக குறைந்த பயண நேரத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.
சிறப்புமிக்க இந்தத் திட்டம் இந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து_வருகிறது. எனவே, தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில்பாதை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்தப்பகுதி மக்களின் விருப்பமாகும்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.