பிரதமர் நரேந்திரமோடி, இளைஞர்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருபுத்தகம் எழுதி வெளியிட போகிறார். மாதம் ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி அகில இந்தியவானொலி மூலம் 'மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டுமக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இளைஞர்களுக்கான ஒருபுத்தகத்தை இந்தாண்டு இறுதிக்குள் பிரதமர் எழுதிவெளியிட உள்ளார். இந்தப்புத்தகத்தின் மூலம், தேர்வுநேரத்தில் இளைஞர்கள் எப்படி மன அழுத்தத்திலிருந்து வெளிவருவது, எப்படி நிலையான தன்மையில் இருப்பது மற்றும் தேர்வுகள் முடிந்தபின்னரும் என்ன செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து விரிவாக எழுதவுள்ளாராம். பென்குயின் ராண்டம் ஹவுஸ் பதிப்பகம் இந்தப்புத்தகத்தைப் பல இந்திய மொழிகளில் வெளியிட உள்ளதாம். இந்த புத்தகத்தில் மாணவர்களுக்கு நெருக்கமான பலவிஷயங்கள் பற்றி மோடி எழுதப்போகிறார். இந்தப் புத்தகத்தின் வாயிலாக மோடி, மாணவர்களின் நண்பராகமுடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளார் என்று பதிப்பகத்தினர் கூறியுள்ளனர்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.